‘நானும் சாந்தனுவும் இளவயது நண்பர்கள்.சினிமாவை உயிருக்குயிராய் நேசிப்பவர்கள். நடிப்பு, இயக்கம் என்று ஏதாவது ஒரு துறையில் இயங்கிக்கொண்டே இருப்பவர்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ‘குண்டுமல்லி’என்கிற ஆல்பத்தை வெளியிடுகிறோம்’என்கிறார் ஆதவ் கண்ணதாசன்
எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் பேனரில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘குண்டுமல்லி’ என்கிற உற்சாகமான காதல் பாடலை டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிடவுள்ளது.
இது தொடர்பாக ஆதவ் கண்ணதாசன், சாந்தனு பாக்கியராஜ், மஹிமாநம்பியார், பாடலுக்கு நடனம் அமைத்த காயத்ரி ரகுராம் மாஸ்டர், இசையமைத்த ஜெரார்ட் ஃபெலிக்ஸ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தினர்.
அப்போது பேசிய ஆதவ் கண்ணதாசன்,” நானும் சாந்தனுவும் நீண்டகால நண்பர்கள். நான் நடித்த சில படங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக வெளியாகாமல் இருக்கும் நிலையில், இப்படி ஒரு பாடலை ஆல்பமாக செய்து வெளியிடலாமா என்று கேட்டப்போது மிக உற்சாகமாக ஒத்துக்கொண்டு, மிக இன்வால்வ்மெண்டோடு நடித்தும் கொடுத்தார். காதலன்,காதலி, ஒரு நிச்சயதார்த்தன் என்கிற சின்ன நிகழ்வை எடுத்துக்கொண்டு மிகுந்த ரசனையுடன் இப்பாடலை உருவாக்கியிருக்கிறோம். இப்பாடல் நிச்சயம் பார்வையாளர்களின் மனதிக் கொள்ளை கொள்ளும்’ என்றார்.
அவரது கருத்தை வழிமொழிந்து பேசிய சாந்தனு,” ஆதவ் என் நண்பர் என்பதற்காக மட்டுமல்ல. அவருக்குள் ஒரு ரசனையான இயக்குநர் இருக்கிறார் என்பதை இந்த பாடல் உருவாக்கத்தின்போது அறிந்துகொண்டேன். ஒவ்வொரு ஷாட் எடுக்கும்போதும் அவ்வளவு மெனக்கெட்டு மென்மேலும் பாடலை மெருகேற்றிக்கொண்டே இருந்ததை மறக்க முடியாது. மிக விரைவில் ஆதவ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக நிச்சயம் மிளிர்வார் என்றார்.
அடுத்து பேசிய மஹிமா நம்பியார்,” ஆதவை எனக்கும் ஐந்தாறு வருடங்களாகத் தெரியும் என்றாலும், அவருக்குள் ஒரு இயக்குநர் இருக்கிரார் என்பதை இந்த ஆல்பத்தில் நடித்தபோதுதான் தெரிந்துகொண்டேன். முதலில் இந்தப் பாடலை அனுப்பு நடிக்க சம்மதமா என்று கேட்டபோது, தெரிந்த நண்பராயிற்றே என்பதற்காகத்தான் ஒத்துக்கொண்டேன். ஆனால் அவர் இயக்கத்தில் நடித்தப்போது, நண்பர் மட்டுமல்ல,.. நல்ல ரசனையான இயக்குநர் என்பதை உணர்ந்துகொண்டேன். நிச்சயம் அவர் நல்ல தரமான படத்தை விரைவில் இயக்கி முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடிப்பார் என்றார்.
பாடலுக்கு நடனம் அமைத்த மாஸ்டர் காயத்ரி ரகுராம் பேசும்போது,”சாந்தனு எனக்கு ஒரு வகையில் உறவினர் என்பதற்காக சொல்லவில்லை. ஒரு சரியான படம் அமைந்திருந்தால் சாந்தனு இருந்திருக்கவேண்டிய இடமே வேறு. அதை இந்தப்பாடலுக்கு நடனம் அமைக்கும்போது இன்னும் அதிகமாக உணர்ந்தேன். மஹிமாவும் சாந்தனும் நிஜ காதலர்கள் போல அவ்வளவு கியூட்டாக இப்பாடலில் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள். படங்களில் பாடல்கள் குறைந்து வரும் வேளையில் இது போன்ற ஆல்பங்கள் மிக மிக அவசியமானவை என்றார்.
இந்த ஆல்பத்துக்கு இசையமைத்துப் பாடிய ஜெரார்ட் ஃபெலிக்ஸ் பேசுகையில் ‘ஸ்டலின் தான் வர்றாரு’போன்ற ஒன்றிரண்டு அரசியல் பிரச்சாரப் பாடல்களுக்கு இசையமைத்த வகையில் பிரபலாமன நான், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தளத்துக்குப் போகவேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்தபோதுதான் ஆதவ் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது நான் அவருக்கு அனுப்பிய சில பாடல்களில் இந்த குண்டு மல்லி பாடலை செலக்ட் செய்தார். எனது பாடலை அவர் படமாக்கியிருப்பதை பார்க்கும்போது எனது சினிமா இசையமைப்பாளர் கனவு வெகு தூரத்தில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்’என்றார்.