ஜெயில்’படத்துக்கு ஒரு வாரம் முன்பு ரிலீஸாகி அத்தனை செண்டர்களிலும் ஃபெயில் ஆன ஜீ.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’படத்துக்கு திடீரென சக்சஸ் மீட் நடத்தப்படுவது கண்டு பத்திரிகையாளர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படுபரிதாபமான சக்சஸ் மீட் இன்று மதியம் 12 முதல் 3 மணி வரை பிரசாத் லேப்பில் நடைபெற உள்ளது.

க்டந்த 3ம் தேதியன்று ரிலீஸான ‘பேச்சுலர்’படம் சொதப்பலான திரைக்கதையாலும், செயற்கையாக திணிக்கப்பட்ட சர்ச்சைக்காட்சிகளாலும் ரிலீசான முதல் நாளே படுதோல்விப்படமாக அறிவிக்கப்பட்டது. ரிலீஸான வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய மூன்றே தினங்கள் மட்டுமே நொண்டி நொண்டி ஓடிய இப்படம் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. அடுத்த நாளான திங்களன்று 95 சதவிகித இடங்களிம் படம் தூக்கியடிக்கப்பட்டு ‘மாநாடு’படக் காட்சிகள் போடப்பட்டன.

அப்படிப்பட்ட ஜம்மென்ற வெற்றி பெற்ற ‘மாநாடு’தயாரிப்பாளரே கம்மென்று இருக்கும்போது ஓடாத படத்துக்கு எதற்கு வீணான வெளம்பரம் என்றுதான் விளங்கவில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.