‘வீரா’படத்த்துக்குப் பின் ,அ தாவது சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ராஜாவின் இசையில் அதுவும் அவரது பாவலர் கிரிய்யேஷன்ஸ் தயாரிப்பிலேயே ரஜினி நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி வந்திருக்கிறது.
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்காக நல்ல கதையைக் கொண்ட இயக்குநரைத் தேடும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.
இதற்கிடையே, அமிதாப் பச்சன் நடித்த ‘சீனி கம்’, ‘பா’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களை இயக்கிய பால்கி, தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார்.
அவர், ரஜினிகாந்தை வைத்து ஒரு இந்தியப்படம் எடுக்கவிருக்கிறார் என்றும் அப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்றும் பேச்சுகள் வந்துகொண்டிருக்கின்றன.
இதோடு இப்போது கூடுதலாக இன்னொரு தகவலும் உலவிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், பால்கி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பது உண்மைதான் என்றும் அப்படத்துக்கு இளையராஜா இசையமைப்பது மட்டுமின்றி அப்படத்தைத் தயாரிப்பதே இளையராஜாதான் என்றும் சொல்லப்படுகிறது.
பாவலர் கிரியேஷன்ஸ் என்கிற படநிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்திருக்கும் இளையராஜா, சில ஆண்டுகளாகப் படத்தயாரிப்பில் இறங்கவில்லை. இப்போது மீண்டும் படம் தயாரிக்கவிருப்பதாகவும் அதில் ரஜினிகாந்த் நடிக்கவேண்டுமென்றும் இளையராஜா கேட்க அதற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இதனால் இளையராஜாவுக்கும் ரஜினிகாந்த்துக்கும் இணக்கமான பால்கி உள்ளே வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.