‘டைரக்ஷன் பண்றதுல ரிஸ்க் ரொம்ப இருக்கு. அதனால நீ ஸ்ட்ரெயிட்டா ஹீரோ ஆயிடு’என்று தனது மகன் அர்ஜீத்துக்கு ஆலோசனை வழங்கியிருக்கும் இயக்குநர் ஷங்கர் அதை மிக மும்முரமாக செயல்படுத்தவும் களமிறங்கிவிட்டாராம்.
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உண்டு. இவர்களில் அதிதி இப்போது நடிகையாகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி.
தன் வாரிசுகளை திரைத்துறையில் விடக்கூடாது என்பது இயக்குநர் ஷங்கரின் எண்ணம் என்பார்கள். ஆனால் வாரிசுகள் அப்படி இல்லை.ஷங்கர் எவ்வளவோ பிடிவாதமாக மறுத்தும் அதைவிட பிடிவாதமாக இருந்ததன் காரணமாக அதிதி நாயகியாகியிருக்கிறார்.
அடுத்து அவருடைய மகன் அர்ஜித்தும் திரைத்துறைக்குள் வரவிருக்கிறாராம். தொடக்கத்தில் இயக்குநர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் அமெரிக்கா போய் இயக்குநருக்கான படிப்பைப் படித்துவிட்டு வந்தாராம்.அதனால் அவர் இயக்குநராகப் போகிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க யாரும் எதிர்பாரா விதமாக அவரும் கதாநாயகன் ஆகவிருக்கிறாராம்.
இதற்காக என் எஸ் டி எனப்படும் நேசனல் ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனத்திலிருந்து முக்கியமான ஒருவர் ஷங்கரின் வீட்டுக்குச் சென்று அர்ஜித்துக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்துவருகிறாராம். அர்ஜித்தை நாயகனாக வைத்து நான் படம் இயக்குகிறேன் என ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் ஷங்கரை அணுகியிருக்கிறார்களாம்.
ஷங்கருக்கோ தனது மகனை எடுத்த எடுப்பிலேயே அஜீத் ரேஞ்சுக்கு டாப் ஹீரோவாக்கும் எண்ணம் இருப்பதால் இயக்குநர் தேர்வில் மிக மிக கவனமாக இருக்கிறாராம். ‘வர்மா’ என்கிற ஒரே படத்தின் மூலம் விக்ரம் மகனை அகில இந்திய டாப் ஸ்டாராக்கிய பாலாவிடம் ‘ஷர்மா’ என்றொரு இன்னொரு கிளுகிளுப்பான சப்ஜெக்ட் இருக்கிறதாம். ஷங்கரனார் முயன்று பார்க்கலாம்.