உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும். அந்த ஆஸ்கரின் யூடியூப் சேனலில் ’ சீன் அட் தி அகாடமி ‘ என்ற தலைப்பில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.
அந்த வகையில் டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியிலும் பெரிதும் வெற்றிப்பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகளை பதிவேற்றம் செய்திருக்கிறது ஆஸ்கர். அந்த வீடியோவில் ஜெய்பீம் திரைப்படத்தின் சில காட்சிகளையும் படத்தின் இயக்குனர் அந்த படத்தை பற்றி பேசும் சில விஷயங்களையும் ஆஸ்கர் பகிர்ந்துள்ளது.
சூர்யா – டி.ஜே. ஞானவேல்
தமிழ் சினிமாவிற்கு இது மிக பெரிய கவுரவம் என்று சமூக வலைத்தளங்களில் அனைவரும் பதிவிட்டு அப்படத்தை வாழ்த்தி வருகின்றனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.