பொய்யின்றி மெய்யாகவே நடந்த நிஜ சம்பவத்தின் உண்மை முகம் இது! (ஒரு பரபரப்பான லைவ் ரிப்போர்ட்)
இந்த தேசத்தின் வளர்ச்சி ஒன்றே தனது வாழ்நாளின் இலட்சியம் என்று சொல்லிலும் செயலிலும் ஒவ்வொரு மைக்ரோ நொடியிலும் நிரூபிப்பவர் இந்தியாவின் நவீன இரும்பு மனிதர் நமது சவுகிதார் ஜி என்பது இந்த உலகுக்கே தெரிந்த பழமையான செய்தி. பஞ்சாப் மக்கள் துணிச்சல் மிகுந்தவர்கள், மாவீரர்கள், முன் வைத்த காலை பின் வைக்காதவர்கள், போராட்ட குணமுடையவர்கள், விடா முயற்சி உடையவர்கள் என்பதை..
இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தவே, கடந்த ஒரு வருடமாக பஞ்சாப் விவசாயிகளை போராட்டத்தை நடத்த விட்டு, அவர்களுக்கு நிறைய இடையூறுகள் தந்து, அவர்கள் உறுதியை சோதித்து பின்பு தனது முடிவை வாபஸ் வாங்கிக் கொண்டு பஞ்சாப் மக்களின் உறுதியை உலகிற்கு உணர்த்திய உத்தமர் நமது ஜி!
இதை நம் மயில்சாமி ஜி “கடவுள் கூட தன் பக்தனை சோதிப்பதில்லையா நான் சோதித்தால் அது தவறா!” என அடிக்கடி குழந்தை போல கேட்பா”ராம்”
அப்படிப்பட்ட வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட பிதாமகர் பஞ்சாப் செல்கிறார், வானிலை மோசமாகியுள்ளது என்கிற தகவல் வருகிறது. மேக மூட்டத்தில் விமானங்கள் பறந்தால் ராடாருக்கு தெரியாது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தி அவர்களை பருப்பெடுத்த பராக்கிரமசாலி அல்லவா அவர்! நான் ஆளும் தேசத்தில் என் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கவேண்டும், மேக மூட்டத்தில் பறந்து நான் ராடாரை ஏமாற்ற விரும்பவில்லை! நான் பேச வந்த பொதுக் கூட்டத்திற்கு எந்தத் தடை வந்தாலும் போய் தீருவேன், ஆகவே ‘பூட்றா வண்டியை’ என தன் அதி நவீன பென்ஸ் காரை எடுக்கச் சொன்னார் நாடாளும் நம் நவீன நாட்டாமை!
இதற்கிடையில் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் போராட்ட உறுதியை உலகிற்கு உணர்த்திய பிதாமகரை வரும் வழியிலேயே வரவேற்று சாலையோரமே விலாவை சிறப்பு செய்ய கிளம்பியுள்ளார்கள்..என்னும் செய்தி தலைமை ஒற்றன் வாத கோடரி மூலம் வந்தடைந்தது.
சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கும் குணம் கொண்டவர் அல்லவா நம் குகைஜி! கேதார்நாத் குகையையே பார்த்த அவரை எவர் சேதாரம் செய்ய முடியும். நமது ‘ஜி’யின் கன்வாய் பஞ்சாப் சாலைகளில் இராமரின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் போல சீறிக் கிளம்புகின்றன.
இடையே ஒரு பாலம் வருகிறது! அதன் மீது மொத்த பஞ்சாபே திரண்டு நிற்க, விழாக் கோலம்! ஜீயின் கார் பாலத்தில் வந்ததும் மொத்த மக்களும் ஜீயை ஆர்வமாக சூழ்ந்து கொண்டு கண்ணீர் மல்க பேசினர். எங்களைப் பார்க்க எவ்வளவோ தூரம் வந்திருக்கிறாரே என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
“அன்பான பிரதமர் அவர்களே நீங்கள் இந்த தேசத்தின் சொத்து! ஒரு வருடம் டில்லியில் எமக்கு தங்க இடம் கொடுத்து, நிறைய இடையூறும் கொடுத்து கடைசியாக வேறு வழியின்றி எங்கள் கோரிக்கையை ஏற்ற மாமனிதர் நீங்கள்! கேவலம் ஓட்டுக்காக எங்கள் மாநிலத்திற்குள் வரலாமா? ஒரு வார்த்தை எனக்கு ஓட்டு போடுங்கன்னு மங்கி பாத்தில் கூட சொன்னால் கூட நாங்க ‘செஞ்சி’ருப்போமே! இது ஒமிக்ரான் நேரம் ஜி! கூட்டம் கூடக் கூடாது. இதில் உங்களுக்கு ஏதாவது ஒரு தொற்று வந்தால் அந்த பழி இந்த பஞ்சாபிற்கு தானே வந்து சேரும். அந்த அவப் பெயரை நீங்கள் எங்களுக்குத் தரலாமா? இந்த பாரதத்தை காக்க உங்களை விட்டால் எங்களுக்கு நாதியில்லை தயவு செய்து திரும்பிப் போய்விடுங்கள்’ என்று நமது ஜி காலில் விழுந்து அழுது கெஞ்சினார்கள்.
நம் நாட்டு மக்களின் வலியை பல முறை உணர்ந்த நம் ஜி அவர்கள் இம்முறையும் அதை உணர்ந்து கண்ணீர் மல்க அங்கிருந்து அப்படியே பாலத்திலிருந்து யூ டர்ன் அடித்து பிரியா விடை பெற்று ஏர்ப்போர்ட் கிளம்பினார் ஜீ.
அதே நேரம் வானிலையும் பளிச்சென ஆகிவிட ராடாரை ஏமாற்றாமல் நிம்மதியாக தனது டெல்லி இல்லம் திரும்பினார் நம் ஜீ.
இதுவே நிஜத்தில் நடந்த மெய்யான உண்மை!
அங்கே எல்லையில் நம் இராணுவ வீரர்கள்.. பஞ்சாபில் அஞ்சா நெஞ்சர் ஜீ..
தயவு செய்து இதை நம் பாரத சொந்தங்களுக்கு ஷேர் செய்து நீங்கள் ஒரு தேசப்பற்று மிக்கவர் என்பதை உறுதி செய்யுங்கள். 💪 🇮🇳 💪 🇮🇳 💪 🇮🇳
டிஸ்கி : ‘மாநாட்டு மைதானத்தில் கூட்டம் இல்லை அதான் ஜி திரும்பி போயிட்டார்’ என்கிற பொய்யான காரணத்தை பரப்புகிற விஷமி யார் எனத் தெரியவில்லை!
மொத்த பஞ்சாப்பும் திரண்டு சாலைக்கு வந்து நமது ஜியிடம் கெஞ்சி கொண்டிருந்த போது மாநாட்டுத் திடலில் கூட்டம் எப்படிய்யா இருக்கும்!
ரேஸ்க்கல்ஸ்ஸ்.. என்ன சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு!
#வெங்கடேஷ்_ஆறுமுகம்
–வாட்ஸப் வம்பு.