கொரோனா தொற்று மூன்றாவது இன்னிங்ஸை இன்னும் உத்வேகமாகத் துவங்கியுள்ளதால் வரும் 10 தேதி முதல் திரையரங்குகள் முழுமையாக மூடப்படும் வாய்ப்புள்ளதாகவும் அடுத்து திரையரங்குகள் மீண்டும் திறக்க 2 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் திகில் கிளப்பப்படுகிறது.
கொரோனா தொற்று கடந்த வாரம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதை ஒட்டி புதிய சில கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்ட நிலையில் திரையரங்கங்களுக்கும் 50 சதவிகிதம் அமட்டுமே அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதனால் நாளை மறுநாள் 7ம் தேதி வெளியாவதாக இருந்த எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘ஆர் ஆர் ஆர்’படம் கலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது பரவல் இன்னும் அதிகரித்துள்ளதால் வரும் 10ம் தேதி முதல் அட்லீஸ்ட் இரு மாதங்களுக்காவது திரையரங்குகளை முழுமையாக மூடவேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதை ஒட்டி பொங்களுக்கு வெளியாவதாக இருந்த அஜீத்தின் ‘வலிமை’ தெலுங்குப்படமான ‘ராதே ஷ்யாம்’ விஷாலின் ‘வீரமே வாகையே சூடும்’ ஆகிய படங்கள் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அவ்வாறு இப்படங்கள் தள்ளிப்போகும் பட்சத்தில் விஜயின் ‘பீஸ்ட்’படமும் ஏப்ரல் ரேஸில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.