இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டின் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையமாகக் கொண்டு ஜனரஞ்சகமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் திரை முன்னோட்டம் திரைப்பட குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.
தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் பேசியதாவது…
எனக்கு முழு சுதந்திரம் தந்த சமீர் சாருக்கு நன்றி. இந்தப்படம் எழுத ஆரம்பித்தபோதே இதில் புதுமுக நடிகர்கள் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அதற்கு ஒத்துழைத்த தயாரிப்பு குழுவுக்கு நன்றி. இந்த படத்தில் நடித்த எல்லோரும் மூனு ஆடிசன் முடிச்சு தான் வந்தாங்க, 2 மாதம் ரிகர்சல் பண்ணி தான் ஷூட்டிங் போனோம். இந்த படத்தில் தங்கள் உயிரை தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ஷூட்டிங் முடிச்ச உடனே, லாக்டவுன் வந்துவிட்டது. இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் இருந்தது, ஜீ5 தளத்தில் ஒரு நாளைக்கு எத்தனை படங்கள் பார்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும் அதைத் தாண்டி, இந்தப் படத்தை பார்த்து, தேர்ந்தெடுத்ததற்கு அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. “முதல் நீ முடிவும் நீ” திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், K.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் CSV, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை எழுதி இயக்குவதுடன், இயக்குநர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். சுஜித் சாரங் (ஒளிப்பதிவு), ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங்), தாமரை-கீர்த்தி-காபர் வாசுகி (பாடல் வரிகள்), ஆனந்த் (இணை இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் புரடியூசர்), வாசுதேவன் (கலை), G வெங்கட் ராம் (விளம்பர புகைப்படம்), கண்ணதாசன் DKD (விளம்பர வடிவமைப்புகள்) , ராஜகிருஷ்ணன் M.R(ஒலி வடிவமைப்பு), மற்றும் நவீன் சபாபதி (கலரிஸ்ட்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.
‘நியூயார்க் திரைப்பட விருது விழாவில், ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவில் இத்திரைப்படம் ‘சிறந்த இயக்குனர்’ விருதினையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார்.
“முதல் நீ முடிவும் நீ” படம் ஜனவரி 21, 2022 அன்று Zee5 இல் வெளியாகிறது.