சன் பிக்ஷர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘அண்ணாத்த’படம் ரிலீஸாகும்போது 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ‘வலிமை’ வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் மட்டுமே இருக்கவேண்டும் என்று அறித்திருப்பதால் ’தல’பயங்கர அப்செட்டில் இருப்பதாக அஜீத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 2 நிமிடம் 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லர் வெளியான ஒருசில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘வலிமை’ படத்தில் சில வன்முறைக் காட்சிகள் இருப்பதால் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள்.
தற்போதைய 50 சதவிகித அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள அஜீத் மற்றும் தயாரிப்பாளர் வட்டாரம் படத்தை சில வாரங்கள் தள்ளிவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக அஜீத்தின் மக்கள் தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.