🐝🐝🐝🐝🐝🐝

🐝 தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால். மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது.

( இனிக்கும் செய்தியல்ல. )

🐝தேனீ…
உலகின் மிக சுவாரஸ்யமான
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா?

( முதலில் ஆச்சரியம். )

🐝தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝 தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

🐝 தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.

🐝 யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.

🐝 இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன.

( ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம். )

🐝 அந்தத் தேனீக்கள் இப்போது
அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

🐝 ஆம் உலகை உலுக்கும் செய்தி என்றால்
நிச்சயம் இதுதான்.

🐝 ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை. ஒரே ஒரு தேனீயால் விளையும்.

🐝 அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

🐝தேனீக்களின் ( லைஃப்ஸ்டைல் ) பற்றி
தெரிந்துகொண்டால்தான். அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

🐝 தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும். சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார்கள்.
உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ.

🐝 இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

🐝 மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும்.

🐝 ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ சில
நூறு ஆண் தேனீக்கள். பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

🐝 இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும். பணித்தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்தேனீக்கு 2 வருடங்களும் ஆயுள்.

🐝 ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை.

🐝 ஆண் தேனீக்கு ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.

🐝 மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

🐝 உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

🐝 தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது.

🐝 தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா அப்பத்தான் ஒருசென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும்.

🐝 ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல்.
    பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு.
   ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும்.

🐝 கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே. ராணித்தேனீ அதில் முட்டையிடும்.

🐝 பூக்களின் மகரந்தம், மதுரம் இரண்டும் தான் தேனீக்களின் உணவு.

🐝 அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டு விடும்.

🐝 அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது?

🐝 குளிர் காலங்கள் பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது.

🐝 தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝 தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள். பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் தேன் பையில் சேகரித்துக்கொள்ளும்.

🐝 அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல் தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝 கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள். கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.

🐝 அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டு வந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

🐝 ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான் ஒரு துளி தேன் சேரும்.

🐝 கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும். தேனடையில் கக்கி அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும்.

🐝 பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝 பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும்.

🐝 இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும்.

🐝தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள்.

🐝 அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்.

🐝 இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

🐝 இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி.

🐝 புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்து விடும்.

🐝 அதன் பிறகு ராணித்தேனீ முட்டையிட முட்டையில் இருந்து. வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்.

🐝 தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்து கொள்ளும் முறை அட்டகாசமானது.

🐝 உணவுத் தேவை ஏற்படும்போது ( ஸ்கவுட் ) ஆக சில தேனீக்கள் முன்னே சென்று. பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும்.

🐝 கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ( ஸ்கவுட் ) தேனீக்கள்.
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.

🐝 இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

🐝 வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால். சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும். கீழே பறந்து வாலை ஆட்டினால். சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝 வாலை வேகமாக ஆட்டினால் சோலை அருகில் உள்ளது என்றும். மெதுவாக ஆட்டினால் தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝 சூரியன் சோலையின் திசை தங்கள் கூட்டின் இருப்பிடம். இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

🐝 தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம். அடுத்தடுத்து பூக்களின்         மேல் உட்காரும்போது. விதவிதமான கூட்டணியுடன் பரவும்.

🐝 இதுதான் காடுகளின் சோலைகளின் பரவலுக்குக் காரணம்.

🐝 தேனீக்களை அதிகம் காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

🐝 காரணம் தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்.

🐝 அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?

🐝 அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது தேனீக்களின் அழிவு சதவீதம் 42 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

🐝 இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

🐝 ஆனால் கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.

🐝 தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்? ( Colony Collapse Disorder – சுருக்கமாக CCD. ) அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும்.

🐝 ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால். ராணித்தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும்.

🐝 இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

🐝 பணித்தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

🐝 அதில் முக்கியமானது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.

🐝 செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள். தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்தினை மழுங்கடித்துவிடும்.

🐝 இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும்.

🐝 மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை ( டெர்மினேட்டர் சீட்ஸ் ) என்பார்கள்.

🐝 அதாவது அந்தப் பயிர்கள் விதை தானியத்தை உருவாக்காது. மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

🐝 அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம். செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

🐝 இப்படி விவசாயத்தில் வணிக லாபத்துக்காக மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

🐝 ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது.

🐝 அதனால் அங்கு செயற்கை உரம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை நடத்தி வருகின்றனர். 

முகநூல் பதிவு

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.