சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர்.

அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

படம் கிடைக்கவில்லை என்பதற்காக அவரே தயாரிக்கிறாரா? என்று கேட்டால், இல்லையாம்.நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வேறு இயக்குநர்களை வைத்துத் தயாரிக்கவிருக்கிறார்.

அந்தவகையில் அவருடைய தயாரிப்பில் முதல்படம் இன்று (பிப்ரவரி 14,2022) தொடங்கியுள்ளது.

கதாநாயகியை மையமாகக் கொண்ட இந்தப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பிலேயே தயாராகியிருக்கும் கூகுள் குட்டப்பா படத்தை இயக்கியுள்ள சரவணன் இயக்குகிறார்.

இன்று காலை நடந்த படத்தின் தொடக்கவிழாவில் படக்குழுவினர் நாயகி ஹன்சிகா ஆகியோரோடு சிறப்புவிருந்தினர்களாக விஜய்சேதுபதி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கலைப்புலிதாணு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

விஜய்சந்தர் இயக்கிய சங்கத்தமிழன் படத்தில் நடித்தார் விஜய்சேதுபதி. அப்போது உண்டான நட்பை மதித்து, மிகவும் பரபரப்பான வேலைகளுக்கு நடுவே, விஜய்சந்தர் தயாரிப்பாளர் ஆகும் படத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.