அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் எல்லா மதங்களும் தங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வரும் போது… கருத்துக்கள் வரும் போது கருத்துக்களோடு மோதாமல், கருத்துச் சொன்னவர்களோடு தான் மோதி இருக்கின்றன,, மிரட்டி இருக்கின்றன. அடி பணியாத போது எங்கே நாம் தோற்று விடுமோவோ எனப் பயந்து கொலை செய்திருக்கின்றன.
இதுதான் வரலாறு. இந்த வரலாறுகளைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.
மதங்கள் வெற்று நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உணர்சிகளால் கட்டமைக்கப்பட்டவை. அவைகளால் விவாதிக்கவோ தங்களது கருத்துக்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவோ தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவோ முடியாது.
உலகம் தட்டை எனச் சொன்ன மதங்கள்.. உருண்டை எனச் சொன்ன கலிலியோவின் அறிவியலைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தியது.
அறிவியலாளர் புருனோவை ரோம் நகர வீதியில் வைத்து உயிரோடு கொளுத்தியது.
வங்காள தேசத்தில் முற்போக்கு எழுத்தாளர்களைக் கொன்றதும் சல்மான்ருஷ்டி, தஸ்லிமாநஸ்ரின் தலைகளுக்கு விலை வைத்ததும் மதங்கள்தானே.
சமணர்களையும் பௌத்தர்களையும் கழுவேற்றிக் கொன்றதும், எழுத்தாளர்கள் கோவிந்த்பன்சாரே, தபோல்கர்கல்புர்கி,கௌரிலங்கேஷ் ஆகியோரைக் கொன்றதும்
மதங்கள்தானே!!
ஆனால் ,
நாத்திகம் என்பது அப்படி ஆனது அல்ல, அது மனிதநேயத்துடனான அறிவியல் சிந்தனை. அதனால்தான் அது தன்னுடைய கருத்து தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் செய்கிறது. மதங்கள்தான் மனிதனைக் கொன்றிருக்கின்றன…. ஆனால் நாத்திகம் எந்த மனிதனையும் கொன்றதாக வரலாற்றின் எந்தப் பக்கங்களிலும் பதிவுகள் இல்லை.
சாக்ரடீஸ் முதல் புத்தன் வரை, காரல் மார்க்ஸ் முதல் பெரியார் வரை, இங்கர்சால் முதல் பெட்ரன்ட் ரஸ்ஸல் வரை, அனைவரின் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் கடவுள் மறுப்பை விஞ்சிய மனிதநேயமே இருக்கிறது.
நாத்திகர்களே ஆகச் சிறந்த சமூகப் போராளிகளாகவும் இருந்து வருகிறார்கள்.
மதங்கள் கடவுளைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது, நாத்திகம்தான் மனிதர்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
நாத்திகர்களாக மாறுவதும் வாழ்வதுமே மிகச்சிறப்பு. குறைந்த பட்சம் மதங்களை விடுத்து மனிதர்களாகவாவது மாற வேண்டும்.
(படித்ததில் பிடித்தது: )
வாட்ஸப் பகிர்வு.