நடிகர் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாகவும் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினாலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.

இந்த நிலையில் மீண்டும் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மார்ச் 2 அன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘110 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு நிறைவடைந்தது. மொத்த படக்குழுவிற்கும் உங்களின் கடினமான உழைப்பிற்கும் என்னுடைய நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த கையோடு படத்தின் வெளீயீட்டுத் தேதியையும் படக்குழு முடிவு செய்துவிட்டதாம். ஜூன் 2 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரிசையாகப் பெரிய படங்கள் வரவிருக்கின்றன. எனவே யாருக்கும் தொந்தரவில்லாமல் ஜூன் மாதத்துக்குப் போயிருக்கிறது விக்ரம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds