தன்னைத்தானே உருவ கேலி செய்துகொண்டு தற்போது உச்சாணிக்கொம்பில் இருக்கும் நடிகர் யோகிபாபு பற்றி சமீப காலமாக கேள்விப்படும் செய்திகளெல்லாம் ‘ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே போன கதை உனக்குத் தெரியுமா?’என்ற பாடலைத்தான் நினைவுபடுத்துக்கின்றன. காரணம் தன்னை வைத்துப் படம் தயாரிப்பவர்களை அப்படிப் பாடாய்ப் படுத்துகிறாராம்.
வடிவேலு தனி ஹீரோவாக நடிப்பதால், சின்னக் கலைவாணர் விவேக் அமரராகிவிட்டதால் யோகிபாபு இப்போது நிறையப் படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். அவரை முதன்மையாக வைத்தும் சில படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஒருநாள் சம்பளம் 5 லட்சம் முதல் எட்டு லட்சம் வரை என்கிறார்கள்.
இந்நிலையில்தான் அவர் குறித்து எக்கச்சமான புகார்கள் கியூ கட்டி நிற்கின்றன.
சில மாதங்களாகவே படப்பிடிப்புக்குச் சரியான நேரத்தில் வருவதில்லை, வந்தாலும் இயக்குநர்கள் சொல்கிறபடி நடிப்பதில்லை என்பது உட்பட நிறையப் புகார்கள். இப்போது அதைக் காட்டிலும் இன்னும் ஒருபடி மேலே போயிருக்கிறார் என்கிறார்கள்.
அண்மையில், ஒரு படத்தில் முதன்மை வேடத்தில் நடிப்பதற்காகப் பெரும்தொகையைச் சம்பளமாகப் பேசியிருக்கிறார். வந்தவர்களும் அதர்கு ஒப்புக்கொள்ள பேசியதில் பாதித் தொகையை முன்பணமாகத் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அவர்களும் உற்சாகமாக அந்தப்பணத்தைக் கொடுத்துவிட்டனர். அடுத்தநாள் ஒப்பந்தம் போட்டு படப்பிடிப்புத் தேதிகளைச் சொல்லிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். படக்குழுவினரும் சந்தோசமாகச் சென்றிருக்கின்றனர். அவர்கள் மகிழ்ச்சி அடுத்தநாள் வரை நீடிக்கவில்லை. ஆம், அடுத்த நாளிலிருந்து அவர் போனையே எடுக்கவில்லையாம். பணத்தையும் கொடுத்துவிட்டுப் பதறிக்கொண்டிருக்கிறது அக்குழு..
இது ஜஸ்ட் ஒரு சாம்பிள்தான். இப்படி தேதிகொடுக்காமல் இழுத்தடிக்கப்படும் தயாரிப்பாளர்களின் பட்டியல் ஒரு டஜனைத்தாண்டும் என்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, படப்பிடிப்புக்கு வரும்போது உதவியாளர் ஓட்டுநர் உட்பட பலருக்கு தினசரி பேட்டா என்று எழுதி தினமும் பல ஆயிரங்களை தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்கிறாராம். ஆனால் வீட்டுக்குப் போகும்போது அவர்கள் கையில், ‘இந்தா உனக்கு முன்னூறு அவனுக்கு ஐநூறு’ என்று சில நூறு ரூபாய் தாள்களை மட்டும் தந்துவிட்டு மத்ததெல்லாம் கம்பெனிக்கு’ என்று தனது பாக்கெட்டுக்குள் பதுக்கிக்கொள்கிறாராம். இதனால் அவரிடம் வேலிக்குச் சேருபவர்கள் சில தைனங்களிலேயே பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடுகிறார்கள்.
இவரது அட்டகாசங்கள் இவ்வண்ணமே தொடருமானால் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இவரை விட்டு ஓட்டம் எடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.