“Every gun that made, every warship launched, every rocket fired signifies in the final sense,
a theft from those who are hunger and are not fed,
those who are cold and are not clothed.
It is spending the sweat of it’s laborers, the genius of its scientists the hope of it’s children”.
– Dwight D.Eisenhower.
இராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வுமைய அறிக்கை தெரிவிக்கிறது.
உலகில் ஐந்து நாடுகள் ஓராண்டில் 2, 11,300 கோடி டாலர் ராணுவத்திற்கு செலவழிப்பதாகவும் அது மட்டும் மொத்த நாடுகளின் ராணுவச் செலவில் 62% ஆக இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.
அமெரிக்கா (80,100 கோடி டாலர்), சீனா (29,300 கோடி டாலர்) இந்தியா (7660 கோடி டாலர்) இங்கிலாந்து (6840 கோடி டாலர்), ரஷ்யா (6590 கோடி டாலர்) என்று அடுத்தடுத்து இந்த நாடுகள் ஆயுதப் போட்டியில் இறங்கி இருக்கின்றன.
இந்தியா சுதந்திரமடைந்து 75ம் ஆண்டில் இருக்கும் இந்த வேளையில் சில அதிர்ச்சிகரமான, வேதனை தரக்கூடிய, மனதை உலுக்கும் புள்ளிவிவரங்களையும் மனசாட்சியோடு நாம் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியது, ஒவ்வொரு இந்தியனின் கடமை மட்டுமல்ல, ஆளும் அரசாங்களின் ஆகப் பெருங் கடமையாகும்..
1) 20 கோடி இந்தியர்கள் இரவில் ஓர் ரொட்டித் துண்டுக்கும் வழியின்றி பட்டினியோடு உறங்கப்போகிறார்கள்.
2) 55 கோடி இந்தியர்களின் தின வருமானம் 100 ரூபாய்க்கும் கீழ்.
3) 16 கோடி பேருக்கு தூய குடிநீர் என்பது வெறும் கனவு.
4) 17 இலட்சம் பேர் வீடின்றி அநாதைகளாய் உள்ளனர்
இந்த புள்ளி விவரங்களும் நம்மை ஆளும் அரசாங்கங்களின் மனதை உலுக்கட்டும், அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களின் மனங்களையும்.
பீரங்களுக்கு மட்டுமே செலவழிக்கும் டாலர்கள் பிஸ்கட்டுகளுக்கும் திருப்பிவிடப்படட்டும்..
நாளைய இந்தியாவாவது பட்டினியோடு வயிறுகள் உறங்காமல் பார்த்துக் கொள்ளட்டும் !
“தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா,
தனி உடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா”
பட்டுக்கோட்டையார்..
– Dr. ச.தெட்சிணாமூர்த்தி
26-04-22
வாட்ஸப் பதிவு.