மக்கள் நீதி மையம் தலைவர் திரு கமல்ஹாசன் மேதின வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார்!
மகிழ்ச்சி!
எல்லா தலைவர்களும் சொன்னார்கள் தானே அதிலென்ன ஸ்பெசாலிட்டி? என்று நமக்கு தோன்றும்!
அங்கு தான் அவரது நீலச்சாயம் வெளுத்து போச்சு டும்… டும்.. டும்….!
ராஜா வேசம் வேசம் கலைந்து இருக்கிறது!
வாழ்த்துச் சொன்ன கையோடு, இனி ஞாயிற்றுக்கிழமை களிலும் அரசு ஊழியர்கள் வேலைக்கு வரவேண்டும் என்று முன் மொழிந்து இருக்கிறார் ! அதாவது சோம்பேறியாய் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு தண்டனை தருகிறாராம். அதுவும் மே தினத்தில்.
நல்லது தானே!! இதிலென்ன பிரச்சினை என்று நமக்கு தோன்றும்!
உழைக்கும் தொழிலாளி தனக்கு 8 மணிநேர வேலை என்று போராடி இன்னுயிரை கொடுத்து பெற்றெடுத்த உரிமையை ; உலக தொழிலாளர் அமைப்பு (ILO) ஏற்றுக்கொண்டுள்ள உரிமையை அவமதிப்பு செய்கிறார்!
கொரோனா காலத்தில் , மோடி தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, 8 மணி நேர வேலையை 12 மணி நேரம் வரை தொழிலாளர்கள் முதலாளிகளுக்காக வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்திருக்கிறார்!
அதைத்தான் திரு கமல்ஹாசன் மேற்பூச்சு பூசி அதுவும் உழைப்பாளர் தினத்தில் சொல்கிறார் என்றால் எவ்வளவு தைரியம் இவர்களுக்கு? என்பதை பார்த்து கொள்ள வேண்டும்!
ஏனெனில் இது தான் பகவத் கீதையின் சாரம்
கடமையை செய் பலனை எதிர்பாராதே
அடிமையாக வேலை செய்! கூலியை கேட்காதே!
என்பதுதான் அதன் வெளிப்பாடு!
நமக்கு கடமையின் மீது உள்ள அக்கறை கூலி கேட்பதில் வருவதே இல்லை!
சுரண்டல் அமைப்பை தெரிவதேயில்லை!
ஏனெனில் நமக்கு போதிக்கப்பட்டது அதுதான்!
அந்த வகையில் திரு கமல்ஹாசன் மேதின வாழ்த்துக்களாக இந்திய தமிழக உழைப்பாளி மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்
கடமையை செய் பலனை எதிர்பாராதே!
உங்கள் உள்நோக்கம் சிறப்பு திரு கமல்ஹாசன் அவர்களே!