விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் .

விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில்  வர்மா ,நிழல்கள் ரவி  ஆகியோர் நடிக்கிறார்கள் .

‘இசை அசுரன் ‘ ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் .

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது .  

தொழில் நுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் -ஆதிக் ரவிச்சந்திரன்

தயாரிப்பு – S வினோத்குமார் மினி ஸ்டுடியோ

இசை – ஜி வி பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு  – அபிநந்தன் ராமானுஜம்

படத்தொகுப்பு  – விஜய் வேலுக்குட்டி

கலை இயக்கம் – உமேஷ் ராஜ்குமார் .

சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா

உடைகள் – சத்யா NJ

நடனம்  -தினேஷ் , அஸார்

பாடல்கள் – மதுர  கவி ,அஸல்  கோலாறு

நிர்வாக தயாரிப்பு – சொக்கலிங்கம் ,

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

புகைப்படம் – R S ராஜா

விளம்பர வடிவமைப்பு  -கபிலன்

 

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.