மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் கதைக்களத்துடன் இம்மாதம் வெளிவர இருக்கும் திரைப்படம் “கடமையை செய்”
இதில் S.J சூர்யா , யாஷிகா ஆனந்த் , மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன் , சார்லஸ் வினோத் , சேஷு, ராஜா சிம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கணேஷ் என்டர்டைன்மென்ட் & நஹர் ஃபிலிம்ஸ் சார்பாக T.R.ரமேஷ் & ஜாகிர் உசேன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு
இசை -அருண்ராஜ், படத்தொகுப்பு – ஸ்ரீகாந்த் N.B, ஒளிப்பதிவு -வினோத் ரத்தினசாமி ..
எழுத்து& இயக்கம்- வேங்கட் ராகவன்.
சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த டி ராஜேந்தர் மிகவும் ரசித்து, நெகிழ்ந்து படக்குழுவினரை மனதார பாராட்டியதோடு இல்லாமல் இந்தப் படத்தை உலகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலமாக தானே வெளியிடுவதற்கு முன் வந்துள்ளார்.
இந்தக் கோடை காலத்திற்கு குடும்பத்தோடு அனைவரும் கண்டுகளிக்க கூடிய மிக ஜனரஞ்சகமான திரைப்படமாக இருக்கும் என தெரிவித்ததோடு, இப்படத்தை பார்த்து சென்சார் போர்டு இதற்கு ‘ U’ தர சான்றிதழ் அளித்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரைவில் திரை அரங்கில் கண்டுகளித்து கொண்டாடக் கூடிய கமர்ஷியல் சக்சஸ் ஆக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் பல புதுமையான விஷயங்களை சொல்லி காட்சிக்கு காட்சி சுவாரசிய படுத்தி உள்ளதாகவும் இது நிச்சயமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பிரம்மாண்ட வெற்றி காணும், அளவிற்கு அனைவரும் தங்கள் கடமையை செய்துள்ளதாக இயக்குனர் வேங்கட்ராகவன் தெரிவித்துள்ளார்.