கோடம்பாக்கத்தில் மீண்டும் பேய்க்கதைகள் தலைவிரி கோலத்தில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் சென்னை:ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் ஓம் முருகா படப்புகழ் அசோக் குமார் மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி ” திரைப்படத்தை தயாரித்துள்ளது..

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’படப்புகழ் யாஷிகா ஆனந்த் ஏறத்தாழ அதே மாதிரியான ஒரு கிளுகிளுப்பான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதை இதுதான். தனது பாய் பெஸ்டியான அசோக்குடன் ஒரு தனிமையான பங்களாவுக்கு டேட்டிங் கிளம்புகிறார் யாஷிகா. அங்கே காதலர்கள் கசமுசாவில் ஈடுபட எத்தனிக்கும் ஒவ்வொருமுறையும் காலிங் பெல் அடித்து வாசலில் சிலர் நிற்கிறார்கள். அவர்கள் எல்லாம் யார்? யாஷிகா ஆனந்த் உண்மையிலேயே தனது பெஸ்டியுடன் டேட்டிங்குக்கு வந்தாரா அல்லது அவருக்கு உள்குத்து திட்டம் எதுவும் இருந்ததா? என்பதை பரபரப்புடன் அதே சமயம் பதைபதைப்புடன் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரங்கா.

இப்படத்தில் இவர்களுடன் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் கௌரவ வேடத்தில் லொள்ளுசபா ஜீவா நடித்துள்ளானர்.

ஆனந்த் கேமராவையும், கோபி படத்தொகுப்பையும், சுரேஷ் நடனப்பயிற்சியையும், அருள்குமரன் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும் வளர்ந்துள்ள இப்படத்தை சாரதிராஜா தயாரித்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை , வசனம் , எழுதி இயக்கி உள்ள ரங்காவின் பெஸ்டான படம்தான் இது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.