’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இப்படத்தில் தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வலண்டினா சுவாமிநாதன், டாக்டர்.பத்மா வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு எம்.மூவேந்தர் மற்றும் கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்கின்றனர். ஜே.எப்.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்ய, முஜ்பூர் ரகுமான் கலையை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் பல்வேறு பிரச்சனைகளு ஏற்படுகின்றன. அத்தகைய பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்வது தான் ‘லோக்கல் சரக்கு’ படத்தின் கதை.
நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகி பாபு ஆகியோரது கூட்டணியின் காமெடிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருப்பதோடு சமூகத்திற்கான நல்ல மெசஜை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்ஷியல் திரைப்படமாகவும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் கொடுத்திருக்கிறார்.
’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ உள்ளிட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் காமெடி காட்சிகள் உருவாக்கத்தில் தலைசிறந்தவர் என்பது அனைவரும் அறிந்தது தான். அதிலும் ‘லோக்கல் சரக்கு’ படத்தில் மதுப்பழக்கத்தை வைத்து அவர் உருவாக்கியிருக்கும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் வந்திருக்கிறதாம்.
பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை , பல தனியிசை பாடல்கள் மூலமாகவும் பிரபலமானவர்.
’லோக்கல் சரக்கு’ படத்தில் இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் இரண்டு குத்து பாடல்கள் மற்றும் இரண்டு மெலோடி பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருப்பதோடு, டிரெண்ட் செட்டிங் பாடல்களாகவும் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டy இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளது.