5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உலகின் மிகப்பெரிய ஊழல்* நடந்துள்ளது. இந்திய மக்களின் 20 லட்சம் கோடிகள் கொள்ளை போன குறு வரலாறு.
மொபைல் உபயோகிப்பாளர்களுக்கு 1.வாய்ஸ் 2. டேட்டா என இரு பயன்பாடுகள் இருபது தெரிந்த ஒன்றுதானே. சாமனியரின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால்… டேட்டா போக்குவரத்தை மேலும், மேலும் நவீன வசதிகளோடு மேம்படுத்திக்கொண்டே வருவது தான் 3G, 4G.. என MB கணக்கில் இருந்த வசதி, இன்று GB கணக்கில் அனுப்புவது/பெறுவது தான் 5G.
2G ஏலத்தின் போது வெறும் 30கோடி உபயோகிப்பாளர்கள் தான் இந்தியாவில் இருந்தார்கள். அப்போது வாட்ஸாப் கூட கிடையாது. டேட்டா பற்றி பெரிய வியாபார அறிவெல்லாம் முகேஷ் அம்பானிக்கு கூட இல்லை. சந்தர்ப்பவாத அரசியலின் லாபமாக பார்க்கப்பட்ட 2G பொய் குற்றச்சாட்டு மிகப்பெரிய வியாபார வசதிகளை ஏற்படுத்தபோவதை தெளிவாக உணர்ந்து “DATA IS NEW OIL”னு அம்பானி இட்ட முழக்கம்தான் 5G ஊழலின் அடித்தளமே. பிஜேபி ஆட்சிக்கு வந்தது. அதனை தொடர்ந்து இந்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்த அனைத்து நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன. BSNL அழிக்கப்பட்டது. Rest is history…
இன்றைய இந்திய மொபைல் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 130 கோடி என்றால் அவர்களால் கிடைக்கப்போகும் வருமானம் பற்றி யோசித்து கொள்ளுங்கள். 130 கோடி பேருக்கும் GB வேகத்தில் டேட்டா கிடைக்கும் என்றால் என்னென்ன செய்யலாம்னு நினைத்து பார்த்து லிஸ்ட் போடவே ஒரு வாரம் வேண்டும்.
கிட்டத்தட்ட 20 லட்சம் கோடிகளுக்கு விலை போயிருக்கவேண்டிய 5G ஸ்பெக்ட்ரம் வெறும் 1.5 லட்சம் கோடிகளுக்கு மட்டுமே… அதிலும் அம்பானி, அடானி என அவர்களுக்குள்ளேயே பிரித்துக்கொண்டதின் காரணம் வெகுவிரைவில் உணர்ந்துகொள்வோம். VI மற்றும் ஏர்டெல் இருக்குனு சொல்றீங்களா.. யப்பா VIக்கு ஏற்கனவே அரசுதான் உதவிசெய்யுது. AIRTEL அடானிக்கு போகும்.
ஆமா இங்க இருந்த BSNL எங்கடா… BSNL முழுதும் அடானி – அம்பானிக்கு பிரித்துக்கொடுக்கப்படும். அம்பானிக்கு JIO இருக்கு. ஆனா அடானி எப்படிடா ஏலம் எடுக்க வந்தார். தொழிலில் இல்லாதவருக்கு எப்படி அந்த தொழிலை நடத்த டெண்டர் கொடுக்கப்படும்.
இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் கொடுக்கவேண்டியது அரசின் சட்டப்பூர்வமான கடமை. அந்த கடமையை கூட இலவசம் என கத்தி, கதறும் பார்ப்பன ஊடகங்களுக்கு இந்த 20 லட்சம் கோடி ஊழல் தெரியாதா.
அடானி, அம்பானி வாசல்களில் கட்டப்பட்ட வளர்ப்பு பிராணிகளாகிப்போன இந்திய ஊடகங்களுக்கு வீசப்படும் எலும்புகள் தானே முக்கியம்.
*5 G அலைக்கற்றையின் துல்லியமான ஏல விவரங்கள்.*
1.) மொத்தம் ஏலம் விடப்படவிருந்த 5 G அளவு = 72 Giga Hertz.
2.) இதன் அடிப்படை மதிப்பு = 4.30 லட்சம் கோடிகள்.
3.) ஏலம் போன அளவு = 51 Giga Hertz
4.) ஒன்றிய அரசு நிர்ணயித்த அடிப்படை மதிப்பு படி கிடைத்திருக்க வேண்டிய தொகை = 3 லட்சம் கோடிகள்.
5.) ஆனால் ஏலம் மூலம் கிட்டிய தொகை = 1.50 லட்சம் கோடிகள்.
6.) அடிப்படை தொகையிலிருந்து அரசுக்கு நிகர இழப்பு 1.50 லட்சம் கோடிகள் !
7.) ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 Giga Hertz அதாவது மூன்றில் ஒரு பங்கு (72 ÷ 3 = 24) அள்ளியுள்ளது. அடிப்படை விலையின் படி அது அரசுக்கு அளிக்க வேண்டிய தொகை 1.43 லட்சம் கோடி. ஆனால் கொடுக்கப் போவது 88078 கோடிகள் மட்டும். எனவே அம்பானிக்கு மட்டுமே நிகர லாபம் 55000 கோடிகள். நமக்கு நட்டம் அதே 55000 கோடிகள் !
8.) அதானி இதில் பெரிய பங்கு வகிக்கவில்லையாம். 400 Mega Hertz களை மட்டும் ஏலமெடுத்து அதை பொதுமக்களுக்கு பயன்படுத்தாமல் தனியார்களுக்கு மட்டும் பயன்படுத்தப் போகிறார்களாம். ஆனால் இந்தக் கணக்கு மட்டும் எனக்கு தலை சுற்றுகிறது.
72 GHZ க்கான Base Value Rs. 4.3 Lakh Cr. எனில் 1 GHZ value Rs. 5972 கோடிகள். கரெக்ட்தானே ?
ரிலையன்ஸ் ஜாக்பாட் அடிச்சான். அதாவது 24 GHZ க்கு அவன் கொடுக்கவிருக்கும் தொகை ரூ. 88 ஆயிரம் கோடி. அதாவது 1 GHZ க்கு = 3666 cr.
அப்படின்னா அதானி 400 Mhz க்கு, என் கணக்குப்படி 1466 கோடிதானே கொடுக்க வேண்டியிருக்கும் ?
எனக்கு ஜிகா ஹெர்ட்ஸ், மெஹா ஹெர்ட்ஸ், Base rate, Auction rate எதுவுமே தெரியாது. கணிதம் எனக்கு எட்டிக்காய். எனவே இந்தத் தரவுகளை நீங்கள் இன்னும் துல்லியமாகச் சரிபார்த்து பின் கூறுங்கள். வினோத் ராய்களைப் போல நமக்கு வாந்தியெடுக்கும் பழக்கமில்லை !
அதானி ஏலம் எடுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கும் தொகை 212 கோடிகள் மட்டுமே !
என்ன ரீசன் ? இதை தனிப் பயன்பாட்டுக்காக வேறு பயன்படுத்தவிருக்கிறார்களாம். தொழில்நுட்ப காரணிகளை அலசி தெரிந்துக் கொண்டு சொல்லுங்கள் !
கோல்மால் ஓக்கே. அதென்ன அதுக்குள்ள இன்னொரு மால் ?
இப்படில்லாம் செஞ்சுட்டு எங்களுக்கும் ஊழலுக்கும் தொடர்பில்லைம்பா மாமி !
இப்படி ராவிக் கொடுத்தா பில்கேட்ஸ் இல்ல, எலன்மாஸ்க் இல்ல, யானைக்கவுனி குபேரன் செட்டியாரையே முந்திப் போவான் அதானி !
கலைஞர் உயிருடன் இருந்திருந்து
அதானியின் ஏலத்தொகை குளறுபடி உண்மையாகவே இருந்திருந்தால், முதலாளாக அதை நமக்கு அவர்தான் சொல்லியிருப்பார். ஏனெனில் அவர் செய்திகளை வாசிப்பது முன்னதிகாலையில். ஜெயாவுக்கு குமாரசாமி வழங்கிய தீர்ப்பிலிருந்த கூட்டல் பிழையை, தீர்ப்பு நகல் வந்த சில நிமிடங்களில் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தவர் அவர்தான்.
9.) இப்படி 50% நட்டத்தில் இந்த அலைக்கற்றை உரிமத்தை விற்க அரசுக்கு உரிமை உண்டா ? அடிப்படைத் தொகையை யார் நிர்ணயிப்பது ? அடிப்படை விலையை விட எவ்வளவு கூடக்குறைய விற்கலாம் என்கிற எந்த நெறிமுறைகளும் இல்லையா ?
10.) வெளிநாட்டு நண்பர்கள், உங்கள் நாட்டில் 1 GHZ Spectrum என்ன விலைக்கு ஏலம் போனது அல்லது அதன் base rate என்ன என்று சொல்ல முடியுமா ??
சோகம் என்னன்னா அடிமாட்டு விலைக்கு விற்றும் கூட இன்னமும் 29% அளவு = 20.77 Ghz கொள்வாரின்றி தேவுடு காத்து கிடக்கிறதாம் !
தேவைப்படுபவர்கள் போய் எடுத்துக் கொள்ளவும்.
என்ன உங்களையெல்லாம் கேட்லயே சேர்க்க மாட்டாங்களா ?
எப்படி சேர்ப்பான் ?
அவனுடைய ஆதிகாலக் கலாச்சாரமே இன்னார் இன்னார் மட்டுமே அலவ்ட் சிஸ்டம்தானே ?
அதெல்லாம் புரிஞ்சா நீ ஏன் வாட்ஸ்அப் ஃபார்வட் வேலைய பெருமையா நினைப்ப ??
தகவல்கள் உதவி – தமிழ் இந்து.
தலைப்பு : 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்தது. ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்.
நன்றி !
– ராஜ ராஜேந்திரன்