நம் வாழ்வில் ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி, கடிகாரம் நின்று போனால், என்ன ஆகும்? என்று சிந்தித்து பார்க்க முடிகிறதா? நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு கடிகாரம் நம் வாழ்வில் ஒன்றிணைந்துவிட்டது.

கடிகாரம் ஓடவில்லையென்றால், நம் வாழ்வே நின்று போனது போல் ஆகிவிடும்.

அப்படிப்பட்ட கடிகாரம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? அதன் வரலாறு என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

முதன் முதலில் கடிகாரத்திற்கு Clocca என்று தான் லத்தீன் மொழியில் பெயர் வைக்கப்பட்டது.

அதன் அர்த்தம் The bell. காலப்போக்கில் அது Clock-ஆக மாறியது. ஆங்கிலத்தில், 2 0′ clock, 3′ o clock என்று கூறுவதற்கு அர்த்தம் இருக்கிறது. அதாவது, 80-ஆம் நூற்றாண்டில் மணிக்கூண்டுகள் மிகவும் பெரிதாக இருக்கும்.

அதனை பராமரிக்க, time keepers-யிடம் மணி கேட்கும் போது, அவர்கள் 1 of the clock, 2 of the clock என்று கூறுவார்களாம். அது தான் காலப்போக்கில், 1 0′ clock, 2 o’ clock என்று ஆகிவிட்டது.

வரலாற்றில் பல விதமாக நேரம் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகிற்கு sumerians தான் முதன் முதலில் நேரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

முதல் முறையாக, அவர்கள் சூரிய வெளிச்சத்தில் விழும், நிழலை பொறுத்து தான், நேரத்தை கணித்துள்ளனர்.

அதைப்பார்த்து எகிப்தியர்களும் பின்பற்ற தொடங்கினர். ஆனால், அந்த கடிகாரத்தை பகல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இரவு நேரத்தில், நேரம் தெரியாமல் இருந்தது.

இதனால், கிரேக்கர்கள் தண்ணீர் கடிகாரத்தை உருவாக்கினார்கள். அதில் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் நிரம்பி ஒரு சின்ன பெட்டியிலிருந்து, காலி பெட்டி வரை ஒரு காப்பர் குழாயை இணைத்து, அதன் மூலமாக நீரை சொட்டு சொட்டாக வடிய வைத்து, இரவு பகல் நேரத்தை கணித்தனர்.

ஒரு கடிகாரத்தில், 12 எண்கள் இருப்பது நம் கை விரல்களை வைத்து தான். நமது கட்டை விரல்களை மட்டும் விடுத்து, மீதமுள்ள 8 விரல்களின் 3 மடக்கு ரேகைகளை கணக்கில் வைத்து, 8*3=24 என்று ஒரு நாளுக்கு 24 மணி நேரத்தை கணக்கிட்டு கிரேக்கர்கள் கூறியுள்ளனர்.

அதன்பிறகு, இயற்கையை நம்பி நேரத்தை கணிப்பது சிரமமாக இருந்தது.

1505-ஆம் வருடத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த, Peter Henlein என்பவர் தான், முதன் முதலில் நேரத்தை பார்க்கும் இயந்திரத்தை உருவாக்கினார். அது துல்லியமாக இல்லை.

எனவே, 1600-ஆம் வருடத்தில் Jost Burgi என்னும் பொறியியலாளர், நிமிடங்கள் மற்றும் நொடிகள் வைத்து, சரியாக ஒரு கடிகாரத்தை உருவாக்கினார்.

ஒரு நாளுக்கு 24 மணிநேரங்கள் கிடையாது. சரியாக கூறவேண்டும் எனில், 23 மணிநேரங்கள் 56 நிமிடங்கள் மற்றும் 4 நொடிகள் தான் ஒரு நாளுக்கு இருக்கிறது.

அதனை எளிதாக சொல்ல வேண்டும் என்று தான் 24 மணிநேரங்கள் என்கிறோம்

மணிக்கூண்டுகளைக்கட்டி, கடிகாரங்களை அமைத்த பிறகும், அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால், நேரத்தை கணிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதனால், 1901-ஆம் வருடத்தில் battery-கள் மூலம் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கினார். ஆனால், அந்த பேட்டரி மிகவும் பெரிதாக இருக்கும்.

அதனை எடுத்து வருவதற்கே, 20 நபர்கள் தேவைப்பட்டனர். இது மட்டுமன்றி, 16-ஆம் நூற்றாண்டில் லத்தீன் மக்கள், பகலை கணிப்பதற்கு Ante Meridian of the clock என்றும் இரவை கணிப்பதற்கு, Post Meridian of the clock என்றும் பிரித்தனர்.

இதுவே, காலப்போக்கில் AM, PM என்று ஆனது.*

1920-ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தில் John Harwood என்ற நபர், மணி நேரம் எங்கு சென்றாலும் தெரிய வேண்டும், அதனை எப்போதும் எடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதன்படி, அவர் கைக்கடிகாரத்தை வடிவமைத்தார்.

அனைத்து இடங்களுக்கு ஒரே மாதிரியான மணிக்கணக்கு இருந்தது.

ஆனால், பிரான்ஸ் நாட்டில் மட்டும் டெசிமல் கணக்கை வைத்து பின்பற்ற தொடங்கினர்.

இதனால், 10 மணி நேரங்கள் தான் ஒரு நாளுக்கு இருந்தது. உறங்குவதற்கு மட்டும் தான் நேரம் சரியாக இருக்கும் என்று கூறி அந்த முறையை விட்டு, அனைத்து நாடுகளிலும் இருக்கும் பொதுவான முறையையே அவர்களும் பின்பற்ற தொடங்கினர்.

இவ்வாறு தோன்றிய கடிகாரங்கள் தான் இன்று நம் வாழ்க்கையையே தீர்மானிக்கின்றன. தேர்வில் தொடங்கி, சுபகாரியங்கள் வரை நேரம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

–வாட்ஸப் பகிர்வு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.