குஜராத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 5 மணிக்குப் பின்பு, சுமார் 16 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷனே தகவல்கள் சொல்கிறது.
அதாவது கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் வாக்குப்பதிவு 6 சதவீதத்திலிருந்து 11.5 சதவீதம் ஓட்டுக்கள் வரை பதிவாகி இருந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தொகுதிகள் வாரியாக அனைத்து தொகுதிகளிலும் இப்படி ஏன் நடந்தது என்பதை விசாரிக்க கமிட்டி நியமித்திருக்கிறது. அத்துடன் காங்கிரஸ் இப்படி திடீரென்று கடைசி நேரத்தில் 16 லட்சம் பேர் திரண்டு வந்து வாக்களித்தார்கள் என்பது நம்பும்படி இல்லை என்று தேர்தல் கமிஷனிடமும் புகார் தந்துள்ளது.
தேர்தல் கமிஷனோ, 5 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் தருணத்தில் க்யூவில் நிற்கும் அனைவரையும் வாக்குப்பதிவு செய்ய அனுமதிப்பதாலேயே இந்த வாக்குவீத உயர்வு 5 மணிக்கு மேல் தேர்தல் நேரம் முடிந்த பின் அதிகரித்திருக்கிறது என்று சப்பைக் கட்டு கட்டுகிறது.
வேறு யாரும் இதைக் கேள்வி கேட்கவேயில்லை. விவாதிக்கவில்லை. பிறமாநில ஊடகங்களில் கூட. தமிழ்நாட்டிலும் கூட எந்த செய்திச் சேனல்களும் , ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட எந்த செய்திச் சேனல்களும் இதுபற்றிய சந்தேகத்தை எழுப்பவேயில்லை.
அனைத்து ஊடகங்களும் குஜராத்தில் பாஜகவின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் மனோநிலையிலேயே இருந்தன.
EVM மோசடியின் mild version இது. இப்படி ஆரம்பித்து பல அளவுகளில் EVM மோசடிகள் நடத்த முடியும்.
எல்லா தொகுதிகளிலும், வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின், மக்கள் அனைவரும், 10 சதவீதம் மக்கள் வரை, ஒவ்வொரு தொகுதியிலும் திரண்டுவந்து வாக்களித்தார்கள் என்பதை சங்கிகள் மட்டுமே நம்பமுடியும்.
Over 16 lakh votes polled after 5 pm in Guj polls second phase, says data;
https://english.varthabharati.in/india/over-16-lakh-votes-polled-after-5-pm-in-guj-polls-second-phase-says-data-netizens-express-concerns
https://www.tribuneindia.com/news/nation/16-lakh-votes-in-last-one-hour-congress-claims-unusually-high-voting-at-fag-end-of-second-phase-polling-in-gujarat-460293