ஓன்று சென்சார் போர்டு. இன்னொன்று சங்கிகளின் சென்சார் போர்டு.
பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில், ஜனவரி 25-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ‘பதான்’. இத்திரைப்படத்தில் இடம் பெற் றுள்ள 3 நிமிட ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் டிசம்பர் துவக்கத்தில் வெளியாகி பெரும் வர வேற்பைப் பெற்றது. ஒரே நாளில் 1 கோடியே 10 லட்சம் ரசிகர்களின் பார்வைகளைக் கடந்தது. ஒருவாரத்திற்குள் 6 கோடி பார்வையாளர்களைப் பெற்றது.
ஆனால், ‘பேஷரம் ரங்’ என்பது ‘வெட்க மற்ற நிறம்’ என்று பொருள்படுவதால், இந்த வரிகளைக் கொண்ட பாடலும், அதே நேரத்தில் அந்த பாடலில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்து மதத்தின் நிறமான காவிநிறத்தில் நீச்சலுடை அணிந்திருப்பதும், உடனிருக்கும் ஷாருக்கான் முஸ்லிம்களின் அடையாள நிறமாக பார்க்கப்படும் பச்சை நிற உடையணிந்திருப்பதும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
சாதுக்கள், சாமி யார்கள் அணியும் காவி நிற உடையை அணிந்து கொண்டு தீபிகா படு கோனே இப்படி கவர்ச்சியாக ஆடுவது இந்துக் களின் மனத்தை புண்படுத்தி விட்டதாக சங்-பரி வாரங்கள் கொந்தளித்தன. குஜராத் மாநிலம் அகமதாபாத் வஸ்திராபூ ரில் இயங்கும் ‘ஆல்பா ஒன்’ என்ற தனியார் வணிக வளாகத்துடன் கூடிய தியேட்டரில், ‘பதான்’ திரைப்படத்தின் பிரமோஷன் போஸ் டர்களைக் கிழித்தெறிந்து ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’த்தின் அடியாள் படையாக விளங்கும் ‘பஜ்ரங் தள்’ அமைப்பினர் வெறியாட்டம் நடத் தினர்.
படத்தைத் திரையிட்டால், தியேட்டரையும், படத்தில் நடிப்பவர்களையும் உயிரோடு எரிப்போம் என்று அயோத்தி அனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ் உள்ளிட்ட சாமியார்கள் வன்முறையைத் தூண்டினர். இவர்களுக்குப் பயந்து, ‘பேஷரம் ரங்’ பாடல் உள்பட பதான் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு காட்சிகளில் திருத்தங்கள் செய்யுமாறும், பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை செய்து திருத்தப்பட்ட பதிப்பைச் சமர்ப்பிக்குமாறும், படத் தயாரிப்பாளர் களுக்கு திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி உத்தரவு போட் டார்.
இதற்கிடையேதான், சாமியார்கள் ஒன்று கூடி, தனியாக ஒரு தணிக்கைக்குழுவை அமைத்துள்ளனர். ‘பதான்’ திரைப்படம், ஒவ் வொரு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடரையும் தாங்கள் பார்த்து, அனுமதி தந்த பின்னரே பொதுமக்களுக்குத் திரையிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற, பல்வேறு மடங்களைச் சேர்ந்த சாமியார்களின் தர்மசபை கூட்டத்திற்குப் பின், ஜோதிஷ்வர் பீடத்தின் அதிபதி சங்கராச்சாரி யார் அவிமுக்தேஷ்வரானந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், “இந்து சனாதன தர்மம் மற்றும் இந்து கலாச்சாரத்திற்கு எதிராக வெளியாகும் எந்த மொழி திரைப்படத்தையும் தொலைக் காட்சி மற்றும் இணையதள தொடர்களையும் அனுமதிக்க மாட்டோம். ஆபாசக் காட்சிகளையும் பெண்களுக்கு எதிரான கலவரக் காட்சிகளையும் ஏற்க முடியாது. இதற்காக எங்கள் தர்மசபை கூடி ஆலோசித்து சில வழி காட்டுதல்களை வெளியிடுகிறது.
இதன்படி, 9 பேர் கொண்ட தணிக்கைக் குழு அமைக்கப்படுகிறது. அனைத்து திரைப் படங்கள், தொடர்களை இக்குழு பார்த்தபின் அவை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும். இக்குழு ஒன்றிய அரசின் தணிக்கைக் குழுவுக்கு உதவியாக இருக்கும். இந்தப் பிரச்சனையில் நாங்கள் நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். “இந்த தர்ம சபையின் தணிக்கைக் குழு” என பெயரிடப்பட்டுள்ள இந்த தணிக்கைக்கு குழுவுக்கு சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ் வரானந்த் புரவலராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் மான்சாண்டா தலைவராகவும், திரைப் பட நடிகர் மணிஷ் பாண்டே, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.என். மிஸ்ரா, சாமியார் சக்கர பாணி, உ.பி. திரைப்பட வளர்ச்சி கவுன்சில் துணைத் தலைவர் தருண் ராட்டி, ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் அர்விந்த் சிங் பதோ ரியா, பிரீத்தி சுக்லா, டாக்டர் கார்கி பண்டிட், இந்திய தொல்பொருள் ஆய்வக முன்னாள் இயக்குநர் தரம்வீர் உள்ளிட்டோர் உறுப்பினர் களாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஒன்றிய அரசின் திரைப்படத் தணிக்கை குழு அனுமதியளித்த திரைப்படத்தை, இந்த சாமி யார் குழு மறு தணிக்கை செய்யும் என கூறப்படுகிறது.
இனிமேல் அரசுத்துறையில் இருக்கும் எல்லா துறைகளுக்கும் துணையாக ஒரு காவித் துறையும் ஏற்பாடு செய்யப்படும். அரசுத்துறையில் அனுமதி பெற்றாலும், காவித்துறையிலும் அனுமதி வாங்கித் தான் எல்லாம் நடக்க வேண்டும்.
இதுதான் இந்துத்துவ இந்தியா. பாரத் ஆத்தா கீ ஜே.
–நன்றி. தீக்கதிர்.