ஏற்கனவே இருக்கின்ற 29 தொழிலாளர் சட்டங்களை சுருக்கி, வெறும் 4 புதிய தொழிலாளர் சட்டங்களாக மாற்றியிருக்கிறது மோடி அரசு.
வழக்கம் போல தொழிலாளர்களுக்கு பாலாறும், தேனாறும் ஓடப்போகிறது, குறைந்தபட்ச சம்பளம் கிடைக்கப்போகிறது உட்பட அனைத்து அல்வாக்களையும் கிண்டித்தான் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் 44 செகண்டுகளில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாம். அதாவது எந்த விவாதம், பதில் விவாதம், கேள்வி, பதில் எதற்கும் இடமில்லை.
10 பேர் வேலை செய்தாலே அதை தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரும் தொழிற்சாலையாக கருதவேண்டும் என்பதை 20 பேராக அதிகரித்துவிட்டார்கள்.
Fixed term employment என்றே புதிதாக சேர்த்திருக்கிறார்கள். அதன்படி வேலைக்கு எடுக்கும் போதே உனக்கு 6 மாதம், 3 மாதம் தான் வேலை என்று சொல்லியே எடுக்கலாம். இதைப் பயன்படுத்தி கம்பெனி ஒரு தொழிலாளியை மூன்று மாதம் இந்த யூனிட்டில், 3 மாதம் வேறு யூனிட்டில் என்று மாற்றி மாற்றி வேலை செய்ய வைத்து அவரை நிரந்தரத் தொழிலாளி இல்லை என்று சொல்லிவிடலாம்.
அதே போல குறைந்த பட்ச சம்பளம் என்கிற வரம்பை இனி 5 வருடத்துக்கு ஒருமுறை தான் கணக்கிடுவார்கள். விலைவாசியும், பணவீக்கமும் வருடாவருடம் அதிகரிக்கும். ஆனாலும் குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிப்பது மட்டும் 5 வருடத்திற்கு ஒரு முறை தான். அதாவது 5 வருடத்துக்கு ஒரு தடவை தான் சம்பள உயர்வு பற்றிக் கூட பேசமுடியும்.
இப்படி ஏகப்பட்ட ஆப்புகளை தொழிலாளர்களுக்கு டிசைன் டிசைனாக வழங்கியிருப்பது மோடி அரசு.
முதலாளிகளிலும் இது சிறு குறு முதலாளிகள் கம்பெனியை மூடும்போது எளிதாக மூடிவிடலாம் என்று வழிகாட்டுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராயிருக்கும் பாரதி அவர்கள் இந்தக் காணொலியில் விளக்குகிறார்.