பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் நடித்த இரண்டாவது படமாக இந்த ‘DADA’ வெளியாகி இருக்கிறது.
கல்லூரி நாட்களிலேயே காதலிக்கிறார்கள் மணிகண்டனும் (கவின்) சிந்துவும் (அபர்ணா). இதில் சிந்து கர்ப்பமாகிறார். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கிறார்கள். இரு வீட்டினரும் இவர்களை ஒதுக்கிவைக்கின்றனர்.
திருமணத்திற்குப் பிறகும் பொறுப்பில்லாமல் ஊதாரியாகத் திரியும் மணிகண்டன். இந்த நிலையில், சிந்துவுக்குக் குழந்தை பிறக்க, அதை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு எங்கோ சென்று விடுகிறார். மணிகண்டன், தன் குழந்தையை தனியாக வளர்க்க ஆரம்பிக்கிறார்.
பல வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது என்ன ஆனது என்பது மீதிக்கதை.
டாடவாக நடித்திருக்கும் கவின், காதல், அன்பு, காமெடி என அனைத்தும் கலந்து நிறைவாக நடித்திருக்கிறார். பொறுப்பற்ற கணவனாகவும், பின்னர் பொறுப்பு ஏற்றப்பட்டு குழந்தையை வளர்க்கும் அப்பாவாகவும் மாறுகிறார்.
முதல் பாதி மெதுவே நகர்ந்து பொறுமையை சோதித்தாலும் பின்பாதியில் கதை விறுவிறுப்பாக பயணிக்கிறது. ஹரீஷ் முதல் பாதியை நகர்த்த உதவுகிறார். ரசிகர்கள் அதனால் முதல்பாதி குறையை மறந்துவிடுகிறார்கள்.
படத்தின் இரண்டாவது பாதியில் வரும் ஆண்டனி, வி.டி.வி கணேஷ் கலகலப்பை தக்கவைக்கிறார்கள். நாயகி அபர்ணா தனது பங்கை சரியாக நிறைவேற்றி இருக்கிறார்.
ஏற்கனவே முடிவு தெரிந்துவிடக்கூடிய குடும்பக்கதையாக இருந்தாலும் ஜனரஞ்சகமாகவும், மெல்லிய உணர்வுகளை படம்பிடித்த விதத்திலும் புதுமுக இயக்குனர் கணேஷூக்கு ஒரு சபாஷ் போடுவோம்.
டாடா.. போடா என்று சொல்லாமல் வாடா என்று போய் பார்க்காலம்.