ராகவா லாரன்ஸ் நடிப்பில் புதிதாய் வெளிவரவுள்ள திரைப்படம் ருத்ரன்.  FIVE STAR கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் S.கதிரேசன் தானே தயாரித்து இயக்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது ருத்ரன். இத்திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவர உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

மேலும் இந்த முதல் பாடல் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டான ஒரு பழைய பாடலின் ரீமேக் என படக்குழுவினர் குறிப்பிட்டு அது என்ன பாடல் என ரசிகர்களிடம் கேள்வியும் எழுப்பியுள்ளனர். அந்தப் பாடல் “பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்” பாடலின் ரீமேக்காக இருக்கும் என தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds