ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அடுத்த படத்திற்கு ரெயின்போ என்று பெயரிடப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும், எஸ்.ஆர்.பிரபுவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாக்கவுள்ளனர்.

அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கிய இப்படத்தில் தேவ் மோகன் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதுகுறித்து ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதன்முறையாக பெண்ணின் பார்வையில் படமாக்கப்பட்ட கதையில் கதாநாயகியாக நடிக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பிப்பதில் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். ரெயின்போ உங்களை மகிழ்விக்கும் மற்றும் உற்சாகப்படுத்தும் திரைப்படம். இந்த பெண்ணுடனான பயணம் ஒரு பைத்தியக்கார சவாரியாக இருக்கும், அனைவரையும் இணைக்கும் இது ஒரு வேடிக்கையான சவாரியாக இருக்கும்.

இப்படம் தொடர்பான தகவலை தனது ட்விட்டர் பக்கதில் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.