சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள “போர் தொழில்” திரைப்படத்தை, E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான இந்த திரில்லர் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமாக, மீடியா துறையில் மூத்த ஆளுமையான சமீர் நாயர் அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.