திருச்சியில் பெண்களை கொல்லும் ஒரு தொடர் கொலையாளியை கண்டுபிடிக்க நியமிக்கப்படுகிறார் சரத்குமார். அனுபவம் மிக்க அதிகாரி சரத். அவரின் உதவியாளராக புதிதாக பணியில் சேரும் அசோக் செல்வனை சரத்குமார்  அனுபவமில்லாதவன் என்று வறுத்தெடுக்கிறார்.  அவர்களுக்குள் நடக்கும் நீயா நானா? போட்டி, பின்பு படிப்படியே இருவரிடையே தோன்றும் நட்பு;   குற்றவாளி யார்? அவர்கள் குற்றவாளியைப் பிடித்தார்களா ? போன்ற கேள்விகளுக்கான விடையை நீட்டான த்ரில்லராக சொல்லியிருக்கிறது போர் தொழில்.

பணியில் அனுபவத்தில் மிகுந்தவராக வரும் சரத் நடிப்பிலும் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். எதையும் சாதிக்கும் அறிவுத்திமிரை அழகாக வெளிப்படுத்துகிற வேடம். மிகச்சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.

சரத்குமாருக்கு இணையான வேடத்தை இயல்பாகச் செய்து , சற்று சறுக்கினாலும் பாதாளத்துக்குப் போய்விடும் ஆபத்தையுணர்ந்து நடித்து, நல்ல பெயரைத் தட்டிச்செல்கிறார் அசோக்செல்வன்.ம நடிப்பில் சோடை போகாத அவருக்கு மீசையற்ற தோற்றமும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

கதையின் நாயகி நிகிலா விமலும் காவல்துறையிலேயே இருக்கிறார். கதைக்குப் பொருத்தமற்றதாக பாட்டு டூயட் என்று போகாமல் கதையில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் நடிப்பில் நற்பெயர் பெறுகிறார்.

நிழல்கள் ரவி, தேனப்பன்,ஓஏகே.சுந்தர்,சந்தோஷ் கீழட்டூர், சுனில்சுகடா, ஹரீஷ்குமார் உள்ளிட்டு படத்தில் நடித்துள்ளோர் எல்லோரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகளிலும் தெளிவு, மற்ற காட்சிகளும் நிறைவு.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படம் இலகுவாக நகர உதவியொருப்பதோடு எப்போதும் படபடப்புடன் பார்வையாளர்களை வைத்திருக்கவும் பயன்பட்டிருக்கிறது.

ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு, திரைக்கதையின் தன்மையை உணர்ந்திருக்கிறது.

போர் தொழில் என்று பெயர், விறைப்பான காவல்துறை அதிகாரிகள் விசாரணைதான் கதை ஆகியனவற்றை வைத்துக் கொண்டு ஆதலினால் அன்பு செய்வீர் என்கிற ஆழமான கருத்தை விதைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ்ராஜா.

அந்தக் கருத்து விரல்நீட்டிச் சொல்லப்படவில்லை என்பதும் கடைசிவரை விறுவிறுப்புடன் காட்சிகளைக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதும் திரைமொழியில் அவர் சாதித்திருக்கிறார் என்பதற்கான எடுத்துக்காட்டு. முதல் படத்திலேயே த்ரில்லர் கதையை விறுவிறுப்பு குறையாமல் சொல்லி ஸ்கோர் செய்திருக்கிரார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. இயக்குனருக்கு அடுத்த படம் கியாரண்டி.

சில சில இடங்களில் லேசாக தொய்விருந்தாலும் மொத்தத்தில் நிறைவான ஒரு த்ரில்லர். 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.