திரைப்பட தயாரிப்பாளர் விஜய் அசோகனால் தயாரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் வாட்ச் திரைப்படம் ஒரு அறிவியல் த்ரில்லர் ஆகும். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்போது கவனம் ஈர்த்தது.
தற்போது இதன் 2ஆம் பாகம், வாட்ச்-II The Anti-clock Way திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெற்றுள்ளது. க்ரிஷ், சப்ரீனா, மேத்யூ வர்கீஸ் மற்றும் உதய்குமார் ஆகியோர் நடித்துள்ள வாட்ச்-II, முதல்பாகத்தைத் தொடரும் ஒரு அறிவியல் புனைகதை ஆகும்.
இது தலைகீழ் வடிவத்தில் எடுக்கப்பட்ட விரிவான காட்சிகளைக் கொண்டுள்ளது. வாட்ச் முதல் பாகத்தின் போஸ்டரை திரைப்பட தயாரிப்பாளர்கள் பா ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் வெளியிட்டனர்.
விஏ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் அதே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.