விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அடியே. ஏற்கனவே திட்டம் இரண்டு படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்குக்கு இது இரண்டாவது படம். காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜீ.வி. பிரகாஷூக்கு ஜோடியாக கவுரி கிஷன் நடித்துள்ளார்.

படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மல்டிவெர்ஸ் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது.

ஆகஸ்ட் 8ம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது இப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds