ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ ,இரண்டாவது பாடலான ”ஹுக்கும்” மற்றும் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” பாடல்  வரை வெளியாகிவிட்டன். அத்துடன் ஜெயிலர் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  அன்று ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

அந்த வகையில், நேற்று“ஜெயிலர்” படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.  ஆகஸ்ட் 10 முதல் முத்துவேல் பாண்டியனை ரசிகர்கள் திரையில் காணலாம்.

ஆகஸ்ட் 5, 2023 சனிக்கிழமை முதல் ஜெயிலரின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 6 நாட்களுக்கு முன்பதிவு இப்போதே விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் மட்டுமே ரூ. 3 கோடி வரை கலெக்ஷன் ஆகியுள்ளதாம்.

YouTube player

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds