ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ செப்டம்பர் 7-ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டிற்கு பழக்கப்பட்ட கதை என்றாலும் வடநாட்டில் கமர்ஷியல் சினிமாவில் அரசியல் ஊழல்களை கொண்டு வந்ததில் கவனம் பெற்றது ஜவான்.

 ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார். தமிழ் வெர்ஷனில் கலெக்சன் சுமாராக இருந்தாலும் இந்தியில் வெளியாகியுள்ள இடங்களில் வசூல் இன்னும் களை கட்டுகிறதாம்.

ஆயிரம் கோடியை தொடுமா என்று பெருமூச்சு விடுகிறார்கள் படத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds