காவிரியில் நீர் வராதது, கேஸ் விலை உயர்வு, பால் விலை உயர்வு, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, வேண்டுமென்றே அனைத்து வாகன விதிகளை இறுக்கி அபராதங்களை ஒரு வாகனத்தின் விலையில் பாதியை தருமளவு உயர்த்தியது, மணிப்பூர், … எப்படி இந்தியாவில் எவ்வளவோ விஷயங்கள் போராட ஆளில்லாமல் கிடக்க, விஜய் ரசிகர்கள் லியோ படத்தை விடியக்காலம் 4 மணி காட்சி போடச் சொல்லி போராட்டம் நடத்தும் கூத்து நடந்து கொண்டிருக்கிறது. இங்கல்ல புதுச்சேரியில்.
புதுச்சேரியில், தியேட்டர்களில் திரைப்படத்தைக் காண காலை 7 மணி காட்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில், சிறப்புக் காட்சியை திரையிட திரையரங்க நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. அதிகாலை 4 மணிக்கு இந்தச் சிறப்புக் காட்சியை திரையிட வேண்டும் எனக்கூறி ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று சன் நியூஸ் டவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. (இணைப்பு கீழே)
விஜய் ரசிகர்களின் கண்மூடித்தனமான விஜய் பக்தியா அல்லது படத்தயாரிப்பாளர்களின் விளம்பர யுத்தியா, இதில் ஏதோ ஒன்று காரணமாயிருக்கிறது. விஜய்-லோகேஷ் கூட்டணி பெரும் கலெக்சனைக் கொடுக்கும் என்பது நன்கு தெரிந்திருந்தும், படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த போதும், இப்படி அதீதமான விளம்பர ஸ்ட்ண்ட்டுகள் தேவையா ?
https://x.com/sunnewstamil/status/1714301283274826006?s=20