ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இப்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
தற்போது ஹிந்தியில் அடுத்து ராஷ்மிகா நடித்துள்ள திரைப்படம் வெளியாக இருக்கிறது, அதன் டிரைலரும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவின் வீடியோவை ஒரு ஆபாசப் பெண் வீடியோவுடன், AI தொழில்நுட்பம் வைத்து மார்ப்பிங் செய்து இணையத்தில் பரப்பியுள்ளனர். படு மோசமான உடை அணிந்த அந்த பெண்ணை ராஷ்மிகா முகம் மாற்றி வெளியிடப்பட்ட அந்த வீடியோவிற்கு பல திரைப் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதுபற்றி எதுவும் சொல்லாமல் தவிர்த்து வந்த ராஷ்மிகாவும், “என்னைப் போலவே மார்ப் செய்யப்பட்டு வலம் வரும் வீடியோ பற்றி பேச எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இதுபோன்று இனி நடக்காமல் இருக்க நாம் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்” என தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.
Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…
— Rashmika Mandanna (@iamRashmika) November 6, 2023