ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில், தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படங்களுக்கு முன்பு திரைக்கு வர இருப்பது லால் சலாம். தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களுக்கு பிறகு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் தான் லால் சலாம்.
இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
மொய்தீன் பாய் எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.
இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீடு நவம்பர் மாத கடைசியில் வெளியாகலாம்.