கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான த்ரில்லர் படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா பெயரில் கமல் இப்படத்தை மறைமுகமாக இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்திருந்தார். கடவுள் பாதி மிருகம் பாதி பாடல் புகழ்பெற்றது. இது ஒரு சைக்காலஜிகல் த்ரில்லர்.

கமல்ஹாசன் ஹீரோ வில்லன் ஆகிய இரண்டு வெவ்வெறு தோற்றங்களில் கெட்டப் மாற்றி நடிப்பில் மிரட்டியிருப்பார்.  படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், படத்தை டிஜிடைஸ் செய்து, உலகம் முழுவதும் , நவம்பர் 8 முதல், 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக தாணு அறிவித்திருந்தார். இன்று ஆளவந்தான் மறுபடியும் டிஜிட்டலில் ரிலீஸாகி உள்ளது.

ரஜினிகாந்தின் ’முத்து’ படமும் இதே போல ரீ ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

https://x.com/theVcreations/status/1732982688557256891?s=20

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds