ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சிங்கப்பூர் சலூன்.
ரெளத்திரம்,இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா,காஷ்மோரா,ஜுங்கா,அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

எல்கேஜி (2019) மற்றும் மூக்குத்தி அம்மன் (2020) படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் ஆர்ஜே பாலாஜியின் மூன்றாவது படம் சிங்கப்பூர் சலூன்.

சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாட்சி சவுத்ரி, கிஷேன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் சனவரி 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது…..,

இந்தப்படம் எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.இந்தப்படத்தில் மக்களுக்குத் தேவையான கமர்சியல் எலிமெண்ட் எல்லாம் கலந்து இருக்கும்.லோகேஷ் கனகராஜ்,ஜீவா கேமெியோ ரோலில் நடித்திருகாங்க.இது மட்டும் இல்லாமல், ஒரு பெரிய சர்ப்ரைஸ்,ஒரு பெரிய நடிகர் இந்தத்திரைப்படத்தில் நடிச்சிருக்காரு. அதை யாரென்று இப்ப சொல்ல முடியாது.படத்தைப் பார்த்து நீங்களே பயங்கர சர்ப்ரைஸ் ஆகுவீங்க.ஆரம்பத்துல இந்தத்திரைப்படத்தை உள்வாங்க எனக்குக் கடினமா இருந்தது. அப்புறம் போகப்போக நான் பழகிக்கிட்டேன். என் ஆரம்பத்துல நான் வந்து கத்துக்கிட்ட பல விஷயங்கள் இப்போ வரைக்கும் எனக்கு உதவிகரமா இருக்கு.சமூக்க்கருத்துகளை மேலோட்டமா சொல்லி இருக்கோம் அரசியல் பேசாத இந்தப்படம் , மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினார்.

இயக்குநர் கோகுல் பேசுகையில்…….

இந்தத்திரைப்படம் 60% காமெடி மீதி 40% எமோஷன், சென்டிமென்ட் என்ற பல பரிமாணங்கள் உள்ளடக்கி இருக்கு. நம்ம எப்படி ஒரு சாதாரண சலூன் கடைக்கு போயிட்டு முடி எல்லாம் வெட்டுனதுக்கு அப்புறமா நம்மள பார்க்கும்போது ஒரு திருப்தி, ஒரு சந்தோஷம் வர மாதிரி இந்தத்திரைப்படத்தைப் பார்த்து முடிச்சதுக்கு அப்புறமா உங்க எல்லாருக்கும் நிச்சயமாக தோன்றும். என்னுடைய நகைச்சுவை இந்தப்படத்துல இருக்கு அது இல்லாம, வித்தியாசமாகவும் முயற்சி செஞ்சிருக்கோம். நான் என்னோட வாழ்க்கையில பார்த்த நிறைய முடி திருத்துபவர்கள் தான் இந்தக்கதைக்கான ஒரு இன்ஸ்பிரேஷன்.இன்னிக்கு இருக்கக்கூடிய எல்லா பெரிய நடிகர்களும் அவங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட்காக தான் வந்து காத்துக்கிட்டு இருக்காங்க, அந்த அளவுக்கு இன்னைக்கு இந்த தொழில் வந்து ஒரு மிகப்பெரிய ஒரு இடத்தை போய் அடைஞ்சிருக்கு. இந்த உள் கருத்த மையமா வச்சு, இதிலேயே நிறைய விஷயங்களை நாங்க இந்தத்திரைப்படத்தில் பேசி இருக்கோம்.கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும் என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கணேஷ் பேசுகையில்…..

சிங்கப்பூர் சலூன் இதுவரைக்கும் நான் தயாரித்த திரைப்படங்களை விட அதிகப்பொருட்செலவுல தயாராகி இருக்கும் திரைப்படம்.ஆர்.ஜே.பாலாஜியால இப்படியும் நடிக்க முடியுமா? அப்படின்னு மக்கள் வியக்குற மாதிரியான ஒரு கதை அம்சமும்,அவரும் அதுக்கு ஏத்த மாதிரி நடித்திருக்கிறார்,எனக்கு இந்தக்கதை மேல பெரிய நம்பிக்கை இருக்கிறது.ஃபர்ஸ்ட் ஆஃப் எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து மகிழ வைக்கும் கதையாகவும், செகண்ட் ஹாஃப் எமோஷன் மோட்டிவேஷன் இந்த மாதிரி பல சுவாரசியம்சங்களை இந்தத்திரைப்படம் உள்ளடக்கி இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.