சங்கர் எனும் அகோரி, உமா எனும் ஏழெட்டு வயதுச் சிறுமி, ஒரு மருத்துவர், ஆய்வகமொன்றில் வதைபடும் 18 வயது இளைஞன் என்று மூன்று மனிதர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், இந்த நால்வரும் இணையும் இடம் என்ன என்பதுமே காமி திரைப்படத்தின் கதை. அதுவே, இப்படத்தினை முற்றிலும் வித்தியாசமானதாக மாற்றுகிறது.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் ஏதேதோ இடங்களில் வசிக்கும் மூன்று கதாபாத்திரங்கள் எந்தப் புள்ளியில் ஒன்றாக இணையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதா என்றால் ஆம், ஆனால் அதேநேரம், இம்மூன்று கதைகளும் ரசிகர்களின் பொறுமையிழக்கும் அளவுக்கு ஆர்ட் பட ஸ்டைலில் போகின்றன.

வழக்கமாகத் தெலுங்குப் படங்கள் போல ஹீரோ இன்ட்ரொடக்ஷன், பாட்டு, பைட், நகைச்சுவை, கிளாமர் காட்சிகள் என்று எந்த பார்முலாவும் இந்த இந்தப் படத்தில் இல்லை. நாயகனுக்கும், நாயகிக்கும் டூயட் கூட இல்லை.
தாயின் அன்பு, குழந்தையின் ஏக்கம், சுதந்திரத் தேடல் என்று மென்மையான மனித உணர்வுகளை தொட்டுச் செல்கிறது படம்.

ஒரு பாலியல் தொழிலாளி தன் மகளையும் ஊர்  பாலியல் தொழிலாளியாக்குவதிலிருந்து மகள் உமா (ஹரிகா பெடடா) என்ற இளம் பெண்ணை கிராமத்தை விட்டே ஓடும்படி அனுப்பிவிடுகிறாள்.

ஷங்கர் (விஷ்வக் சென்) என்ற அகோரி, பிற மனிதரைத் தொட்டாலே உயிர் போய்விடும் ஒரு நோயிலிருந்து குணமாக 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரிய பூக்களைத் தேடி இமயமலைக்குச் செல்கிறார்.

இமயமலையில் அமைந்துள்ள ஒரு ரகசிய ஆய்வகத்தில், ஒரு தீய விஞ்ஞானி உணர்வுகளைக் கையாளும் ஒரு மருந்தை தான் சிறைப்பிடித்து வைத்துள்ள மனிதர்கள் மேல் பயன்படுத்துகிறார். அந்தச் சிறையிலிருந்து ஒரு சிறுவன் (முகமது சமத்) தப்பி ஓட முயற்சிக்கிறான்.

இந்தக் கதைகள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் அனைத்திற்குமான தொடர்பு விரிவாக கதையாகியிருக்கிறது. ஆன்மீகத் தேடல் என்பதாக மட்டுமல்லாமல் சங்கித் தனமான விஷயங்களும் சேர்ந்திருப்பதால் படம் ஆன்மீகம், விஞ்ஞானம், சமூகம் என்று எல்லாவற்றையும் சுற்றி எதையும் தெளிவாக பேசாமல் அந்தரத்தில் நின்றுவிடுகிறது. இயக்குனர் வித்யாதர் ககிதாவின் முதல் முயற்சி என்பதால் இப்படி ஒரு ஆழமான கதையை தேர்ந்தெடுத்தற்காக பாராட்டலாம். 

வழக்கமான பார்மூலா படங்களிலிருந்து வித்தியாசமான படத்தை பார்க்க விரும்பினால், மெதுவாக நகரும் கதையை பார்க்கும் பொறுமை இருந்தால், இந்த ஓ.டி.டி சீரியல் டைப் கதையை தியேட்டரில் போய் பார்க்கலாம்.

நடிகர்கள்: விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, எம்.ஜி. அபிநயா, முகமது சமத், ஹரிகா பெடடா, தயானந்த் ரெட்டி, சாந்தி ராவ் மற்றும் பலர்
திரைக்கதை: வித்யாதர் ககிதா, பிரத்யுஷ் வாத்யம்
இசை: நரேஷ் குமரன்
டிஓபி: விஸ்வநாத் ரெட்டி
எடிட்டர்: ராகவேந்திர திருன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரவல்யா துடுப்புடி
ஆக்‌ஷன்: விங் சுன் அஞ்சி
தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
இயக்கியவர்: வித்யாதர் ககிதா
ரிலீஸ் தேதி: மார்ச் 08, 2024 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.