இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கபடி விளையாட்டு வீரரின்
வாழ்க்கை வரலாறு திரைப்படம் கபடி. இதில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பற்றிய விவரமும் தெரியவந்துள்ளது.

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ‛போர் தொழில்’ படத்தை தயாரித்த அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

‘பிரேமம்’, ‘குரூப்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை என்றாலும் கபடி என்று கதையையொட்டிய பெயர் வைத்திருக்கிறார்கள். 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.