மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற திரு பிரபாகர் ஐயா அவர்கள், தமிழ்ப் பேராசிரியராக மட்டுமின்றி, ஓவியராக, நாடகவியலாளராக, இசையமைப்பாளராக, கவிஞராக, பேச்சாளராக எனப் பல்வேறு பரிணாமங்களில் சமூக மாற்றத்தை நோக்கி இளைஞர்கள் பலரை நகர்த்தியவராகவும், வழிகாட்டியவராகவும் விளங்கியிருக்கிறார்.
அவருடைய மாணவர்கள் பலர் திரைத்துறையில், நாடகத்துறையில் சிறந்தவர்களாக பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள். மதுரை, ஐயர் பங்களாவில், கலைடாஸ்கோப் என்கிற ஒரு தன்னார்வ அமைப்பின் மூலம் சினிமா, நாடகத் துறையை தொடர்ந்து ஊக்குவிக்கும் நிகழ்வுகளை, பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். எண்ணற்ற கலைஞர்களை ஊக்குவித்து வருகிறார்.
திருமணம் எனும் நிக்காஹ் அனீஸ், கற்றது தமிழ் ராம், தென்மேற்குப் பருவக்காற்று சீனுராமசாமி போன்ற இயக்குனர்கள், மற்றும் இசையமைப்பாளர்கள், நடிகர்கள் பலர் மாணவர்களாக அவரிடம் கல்லூரியில் பயின்றவர்கள்.
அவருடைய பணி ஓய்வு நாளை கல்லூரி மாணவர்கள் சிறப்பாக கொண்டாடி அவருடன் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்டனர். அந்த நாளை ஒட்டி நடிகர் நாசர் அவர்கள் அவருக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி இது.