அஜித் மற்றும் கேஜிஎப் பட இயக்குனர் அஜித் சமீபத்தில் சந்தித்துக் கொண்டனர். உடனே அவர் கேஜிஎப்-3ல் யாஷ் உடன் ஒரு பாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்தி பரவியது.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் முடிவடைந்ததும் பிரஷாந்த் நீல் அஜித்தை வைத்து மொத்தம் இரண்டு படங்களை அவர் இயக்க போகிறார். ஒன்று அஜித் மட்டும் மெயின் ரோலில் நடிக்கும் படம் என்றும், மற்றொன்று கேஜிஎப் 3 என்றும் பேச்சு நிலவியது.
அஜித் மற்றும் பிரஷாந்த் நீல் சமீபத்தில் சந்தித்தது உண்மை தான் என்றாலும் அது மரியாதை நிமித்தமான சந்திப்பே அன்றி படத்திற்காக இல்லை. அவர்கள் கூட்டணி சேர்வதாக வந்த செய்தி உண்மை இல்லை என அஜித்தின் மேனேஜர் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.