சுவிட்சர்லாந்து ஜூரிச்சில் மனிதர்கள் தற்கொலை செய்ய உதவும் கேப்ஸ்யூல் பாட் ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ்ட் ரிசார்ட் எனும் அமைப்பு, சுவிட்சர்லாந்தில் ஒருவர் தற்கொலை செய்ய எந்த சட்டத் தடையும் இல்லை என்று கூறியதுடன், அப்படி தற்கொலை செய்ய விரும்புவர்களுக்காக எளிய வழியில் சிரமமே இல்லாமல் இறப்பைத் தரக்கூடிய இந்த கூண்டை உருவாக்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் முதன்முதலில் தயரான சர்கோ காப்ஸ்யூல் எனும் இந்தக் கூண்டில் ஒரு படுக்கை அதைச்சுற்றிலும் மூடக்கூடிய கண்ணாடி உள்ளது., இதில் படுத்துக் கொண்டு மூடிக் கொண்டு ஒரு பட்டனை அழுத்தினால் கூண்டில் உள்ள ஆக்ஸிஜனை வெளியேற்றி அவ்விடத்தில் நைட்ரஜன் நிரப்பப்படும். நைட்ரஜனை சுவாசிக்கும் நபர் ஹைபோக்ஸியா என்கிற மயக்கநிலை அடைந்து மரணமடைவார். வலி எதுவும் தெரியாது. அதைப் பயன்படுத்த ஒரு நபருக்கு வெறும் $20 செலவாகும்.
சுவிஸ் நாட்டு சட்டப்படி ஒரு நபர் தாங்களாகவே விரும்பி உயிருக்கு ஆபத்தான செயலைச் செய்துகொண்டால், சட்டம் அதைத் தடுப்பதில்லை. ஆனால் இறக்க விரும்பும் நபர் முதலில் அவர்களின் மன திறன் பற்றிய மனநல மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் — ஒரு முக்கிய சட்டத் தேவை.
சாக விரும்பும் நபர் ஊதா நிற காப்ஸ்யூலில் ஏறி, மூடியை மூடிவிட்டு, அவர்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், உள்ளே உள்ள சிவப்பு பட்டனை அழுத்தினால், தானியங்கு கேள்விகள் கேட்கப்படும். மீண்டும ஒருமுறை பட்டனை அழுத்தினால், கூண்டின் உள்ளே காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 30 வினாடிகளுக்குள் 21 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகக் குறைகிறது. அந்த குறைந்த அளவிலான ஆக்ஸிஜனின் காற்றின் இரண்டு சுவாசங்களுக்குள், அவர்கள் சுயநினைவை இழப்பதற்கு முன்பு சற்று மகிழ்ச்சியாக உணரத் தொடங்குவார்கள்” . “அவர்கள் பின்னர் அந்த சுயநினைவற்ற நிலையில் இருப்பார்கள்… மரணம் நிகழும் சுமார் ஐந்து நிமிடங்களில்.
காப்ஸ்யூலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, நபரின் இதயத் துடிப்பு மற்றும் இரத்தத்தின் ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை கூண்டில் உள்ள சென்சர்கள் கண்காணிக்கிறது. அந்த நபர் எப்போது இறந்தார் என்பதையும் தெளிவாகக் கூறுகிறது. இக்கருவி பயன்பாட்டிற்கு இவ்வருடத்தில் வரும் என்றும், இதைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொள்ள 20 டாலர் கட்டணமெனறும் கூறுகிறது சார்கோ நிறுவனம். தற்கொலை செய்துகொள்ள குறைந்தபட்ச வயது வரம்பு 50 வயதாகவும், வேறு ஏதாவது கடுமையான நோய்கள் போன்ற பிரச்சனைகள் இருந்தால் 18 வயதுக்கு மேற்பட்டிருந்தாலே போதுமென்றும் கூறுகிறது இவ்வமைப்பு.
காப்ஸ்யூலை மீண்டும் மீண்டும் பலர் தற்கொலைக்கு பயன்படுத்தலாம். Reusable. நீட்ஷே இன்டர்நேஷனல் (Nitschke’s Exit International) என்கிற தன்னார்வ அமைப்பு இந்த தற்கொலை காப்ஸ்யூலை நிர்வகிக்கிறது. சுவிட்சர்லாந்திலும் சில மாகாணங்களில் இந்த தற்கொலை இயந்திரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், மற்ற இடங்களில் பயன்படுத்த தடை எதுவும் இல்லை. இக்கருவி மூலம் தற்கொலை செய்து ஒருவர் இறந்தவுடன் சுவிஸ் அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள்.
இக்கருவியை நெதர்லாந்தில் 12 வருடங்கள் ஆராய்ச்சிக்குப் பின்பு, 3-D தொழில்நுட்பம் கொண்டு தயாரித்துள்ளனர். இதுவரை மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது இக்கருவி சோதிக்கப்படவில்லை. தற்போதைய சர்கோ கருவி ஐந்து அடி மற்றும் எட்டு அங்குலங்கள் (1.73 மீட்டர்) உயரமுள்ள ஒருவரை மட்டுமே தற்கொலை செய்ய வைக்க முடியும். அடுத்ததாக இரட்டைப் படுக்கை சர்கோவையும் உருவாக்க முயல்கிறார்கள், இதனால் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்து முடித்துக் கொள்ள முடியும். இக்கருவியின் விலை சுமார் 5 கோடி ரூபாய்.
இதைப் பயன்படுத்தி தற்கொலை செய்ய அதற்குள் புக்கிங் செய்து ஆள் கியூவில் இருக்கிறதாம். இந்தப் பாட் மூலம் முதலில் தற்கொலை செய்துகொள்ளப்போவது யார், எப்போது என்பது போன்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது இந்த நிறுவனம். ஒருவரின் மரணம் தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வு, அதை காட்சிப் பொருளாக்க மாட்டோம் என்று கூறுகிறார் சார்கோ நிறுவனத்தின் தலைவர்.
மக்கள் நல்லா வாழுறதுக்கு வழி சொல்லுங்கப்பான்னா சந்தோஷமா சாக வழி சொல்றாங்க.