இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முதன்மை பாத்திரங்களாக நடித்திருக்கும் வரலாற்று வகைத் திரைப்படம் தங்கலான். வெள்ளையர் காலத்தில் நடந்த நிகழ்வினை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.
கே இ ஞானவேல் ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் தற்போது 2024 ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. தங்கலான் படத்தின் டிரைலர் 2024 ஜூலை 10ல் வெளியிடப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.