நடிகர் அஜித் குமார் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ’விடாமுயற்சி’ தீபாவளி அன்று வெளியாகிறது.  ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

நடிகர் அஜித்திற்கு ரேஸ் கார் மற்றும் ரேஸ் பைக்குகள் மீது தீவிர ஆர்வம் இருப்பது தெரிந்ததே. இதற்கு முன்பு ஒரு மிக உயர்ந்த ரேஸ் பைக்கை வாங்கியிருந்தார். சமீபத்தில்  ரூ. 9 கோடி விலை மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் அஜித்.  பெராரி வகை கார்கள் மிகுந்த வேகம் தருவதால் ரேஸ் கார்களாக பிரபலமானவை.

தற்போது அஜித் அந்த Ferrari காரை வாங்கும்பொழுது எடுத்த வீடியோவும் மற்றும் அதனை மாஸாக ஓட்டிப்பார்க்கும் வீடியோவும் அவரது ரசிகர்களால் எக்ஸ் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

https://x.com/PrimeVideoIN/status/1768134578726678603?s=20

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.