அறிமுக இயக்குநர் ஐ.பி.முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மலை.

லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கணேஷ்மூர்த்தி மற்றும் சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தில்,யோகிபாபு,லக்‌ஷ்மி மேனன், காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது, மனிதர்களைப் போல விலங்குகளும்,தாவரங்களும் மலைகளும்,ஆறுகளும், நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது.

ஆனால், அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் அழித்துவருகிறார்கள்.தங்கள் சுயநலத்திற்காகவே அழித்து வருகிறார்கள்.

மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காகச் சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் பின்பு மெல்ல மெல்ல இயற்கை வளங்களைச் சுரண்ட ஆரம்பிக்கிறான்.

இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி, இனம் என்பனவற்றிற்குப் பின்னால் நின்றுகொள்கிறான். சக மனிதர்கள் மீது அன்பை மறந்து, எதிர்கால சந்ததியினரின் வாழ்வை குறித்து கவலைப்படாமல் மனிதப்பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் இந்தககதை மனிதனின் சுயநலக் கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப்பற்றிய ஒரு படைப்பாக வந்திருக்கிறது.

படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகள் ஆகியன அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.

இன்னும் சில தினங்களில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

இப்பட நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்த படம் புளு ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து இப்படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.