நடிகை ஓவியா திரைப்படங்களில் நாயகியாக நடித்ததோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெரும் புகழ்பெற்றார்.புகழோடு சேர்ந்து அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.கடந்த பல மாதங்களாக அவர் பற்றி அவரைத் தவிர வேறு யாரும் பேசவில்லை.
அவர் மது குடிப்பது, தான் போகும் இடங்களில் புகைப்படம் எடுப்பது போன்று ஏதாவது ஒன்றை தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.
இந்த நிலையில், ஓவியாவின் ஆபாச காணொலி ஒன்றை சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் உள்ள நபர்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும் பெண்ணின் கையில் உள்ள டேட்டூவை வைத்து இது ஓவியா எனப் பலரும் கூறி வருகின்றனர். இது உண்மையில் நடிகை ஓவியா தானா அல்லது போலி காணொலியா என இதுவரை தகவல் வெளியாகவில்லை.
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் இதுபோன்ற ஒரு காணொலியை மையப்படுத்திய படமாக இருந்தது.அதில் நாயகியாக நடித்திருந்த பிரியங்கா மோகன் இதுபோன்ற சிக்கல் பற்றிப் பேசும் வசனங்கள் சாட்டையடியாக அமைந்திருந்தன. அந்த வீடியோ பாத்தியா? முழு வீடியோ அனுப்பு என்கிறவர்களைப் பற்றி அவர் பேசும் காட்சி அப்படிப்பட்டவர்களுக்குச் செருப்படியாக அமைந்திருந்தது.
ஆனாலும் இந்த உலகம் திருந்தவில்லை.ஓவியாவின் காணொலி குறித்தும் இதுபோன்ற இணையத்தில் பேசப்பட்டுவருகிறது.
அதேசமயம் இது குறித்த நடிகை ஓவியாவின் எதிர்வினை பெரும் வரவேற்புப் பெற்று வருகிறது.
ஓவியாவின் சமூகவலைதளப் பக்கத்தில் அவரிடம்,இப்படி ஓரு வீடியோ வந்திருக்காமே என யாரோ கேட்க… என்ஜாய் என்று பதில் போட்டிருக்கிறார். இன்னோருவர் வெறும் 17 செக்ன்ட்தான் வீடியோவா என கேலியாகக் கேட்க அதற்கு நெக்ஸ்ட் டைம் என குறியீடு போடுகிறார்.
இந்த எதிர்வினையை வரவேற்றுப் பலரும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.இதழாளர் அதிஷா இது குறித்து எழுதியிருக்கும் பதிவு…
தலைவி ஓவியா மீது எப்போதும் பெருமதிப்பு உண்டு. ஆர்மி தொடங்கப்பட்ட காலந்தொட்டே ஓவியாவை நேசித்து வருகிறேன்.
இரண்டு நாட்களாக ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் பரப்பப்பட்டு வந்தது. முற்போக்காக பேசுகிறவர்கள் பலர் கூட கமென்டுகளில் புள்ளி வைத்து எனக்கு எனக்கு என திரிந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பொதுவெளியில் இப்படி திரிய அசிங்கமாக இருக்காதா.
அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதில்தான் நமக்கெல்லாம் எவ்வளவு ஆர்வம். இதைப் பற்றி கேலி என்கிற பெயரில் எத்தனை வக்கிரம்.
ஆனால் இந்த அந்தரங்க பதிவுகள் வெளியான விவகாரத்தை ஓவியா எதிர்கொண்ட விதம் நம் அனைவருக்குமான பாடம்.
அவருடைய இன்ஸ்டாபக்கத்தில் கமென்டில் இப்படி ஓரு வீடியோ வந்திருக்காமே என யாரோ கேட்க… என்ஜாய் என்று பதில் போட்டிருக்கிறார். இன்னோருவர் வெறும் 17 செக்ன்ட்தான் வீடியோவா என கேலியாக கேட்க அதற்கு நெக்ஸ்ட் டைம் என எமோஜி போடுகிறார்.
யாருக்கும் எந்த விளக்கமும் தரவில்லை. அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதனால் உடைந்து விடவில்லை. அதுதான் ஓவியா. அழுகை வராமலில்லை உங்கள் முன்னால் அழமாட்டேன் என நின்றவள் அல்லவா
விளக்கம் கொடுப்பது ஒரு நோய். விளக்கம் கொடுக்கத் தொடங்கினால் வாழ்க்கை முழுக்க அதை மட்டும்தான் செய்து கொண்டிருக்கமுடியும். ஓவியா பாணியில்தான் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். நமக்கு நேர்மையாக இருந்தால் போதும். ஒரு மயிராண்டிக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.
அதுவே ஆகப்பெரிய விடுதலை
வாழ்க தலைவி வளர்க ஓவியா ஆர்மி
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.
இயக்குநர் கவிதாபாரதி இதுகுறித்து எழுதியிருப்பதாவது…
சகாயவிலையில் விதவிதமான ரகசியக் கேமிராக்கள் மலிந்து கிடக்கின்றன..
யாருடைய அந்தரங்கத்தையும்
மிக எளிதாக படம்பிடித்து வெளியிட இயலும்.. செயலிகள் மூலம் யார் முகத்தையும் இன்னொருவர்மேல் பொருத்த இயலும்..
இவ்வாறு செய்வது அயோக்கியத்தனமானது, கிரிமினல் குற்றம்
இந்நிலையில் ஓவியாவின் வீடியோ என்று ஒரு காணொளி வெளியிடப்படுகிறது, அதைப்பார்த்துவிட்டேன் என்னும் பரவசப்பதிவுகளும், அனுப்பக்கோரும் புள்ளிகளையும் சிறிதும் குற்ற உணர்வின்றிப் பகிர்கிறார்கள்
ஒரு குற்றத்தை ஊக்குவிப்பது
அதில் பங்கேற்பதற்குச் சமமானதில்லையா.. அதில் இருப்பது ஓவியாவோ, வேறு யாரோ அதைப்பார்க்கத் துடிப்பதை எவ்வாறு கொண்டாட்ட மனோநிலையில் செய்ய முடிகிறது
இதில் ஒரு நபர் அந்த வீடியோ இன்னும் கொஞ்ச நேரம் ஓடுவதுபோல் எடுத்திருக்கலாம் என்று ஓவியாவின் பக்கத்தில்போய் பதிவிடுகிறார்.. (ஓவியாவை சிறுமைப் படுத்துகிறாராம்)
அதற்கு ஓவியா பதறவில்லை, மறுக்கவில்லை, விளக்கம் சொல்லவில்லை, next time bro என்று கேட்டவர் முகத்தில் காலணியால் தடவிக்கொடுத்துவிட்டுக் கடந்து செல்கிறார்
திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது, பிரபலங்கள் மட்டுமல்ல, யாருடைய அந்தரங்கமும் காணொளியாக்கப்படலாம். அல்லது யார் முகத்தையும் எளிதாக மாற்றி போலியாக வெளியிடலாம்
அப்படி நேர்ந்தால் அதை
ஓவியா போல் எதிர்கொள்ளவேண்டுமென்று நம்மைச் சார்ந்த எல்லாப்பெண்களுக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும்
பார்த்ததாகப் பரவசப்படுகிற, அனுப்பக்கோரி புள்ளி வைக்கிறவர்களுக்கும்கூட
இது பொருந்தும்
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.