தெலுங்கில் போயபதி ஸ்ரீனு இயக்கிய பெயரிடப்படாத அதிரடித் திரைப்படம் BB4 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது.
தற்போது இந்தத் திரைப்படத்திற்கு அகணடா 2 என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் தெலுங்கு சூுப்பர் ஸ்டார்களில் ஒருவரான நந்தமுரி பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சிம்ஹா, லெஜண்ட், அகண்டா ஆகிய பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணாவும், இயக்குனர் போயபதி ஸ்ரீனுவும் 4வது முறையாக இப்படத்தில் கைகோர்த்துள்ளனர்.
பிபி4 திரைப்படம் 2024 ஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கிறது.
இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் தலைப்பு வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவின் தொகுப்பை கீழே காண்க.