திரைப்பட இயக்குனர் பாலாஜி தரணிதரனிடம் உதவி இயக்குனராக இருக்கும் நாயகன் அசோக் செல்வன் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்யும் அவந்திகா மிஸ்ராவை காதலிக்கிறார் . அசோக் செல்வன் தன் பெண் நண்பருக்கு ஒரு உதவி செய்ய,, அதனால் ஏற்படும் பிரச்சனையால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
பிரிந்து சென்ற காதலி அவந்திகா மிஸ்ராவுடன் மீண்டும் ஒன்று சேர்வதற்கான முயற்சிகளில் அசோக் செல்வன் ஈடுபடும் போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை அவரை காதலியுடன் இணைய விடாமல் தடுத்து விடுகிறது. இறுதியில் அசோக் செல்வன் மீண்டும் தன் காதலி அவந்திகா மிஸ்ராவுடன் இணைந்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’
கதையின் நாயகனாக நடிக்கும் அசோக் செல்வன் காதல் நாயகனாக இளமை துள்ளும் நடிப்பில் தனது கதாபாத்திரத்தை ரசிக்க வைக்கிறார் .
கதைக்கேற்றபடி நடித்துள்ளார் நாயகியாக நடிக்கும் அவந்திகா மிஸ்ரா
அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், மாமாவாக நடித்திருக்கும் படவா கோபி, அக்காவாக வரும் சோனியா , டாக்டராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிறப்பான நடிப்பில் நடித்துள்ளனர் .
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும்,ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
காதலர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்ட கதையுடன் காமெடி கலந்த திரைக்கதை அமைப்பில் குடும்பத்துடன் அனைவரும் பார்க்க கூடிய நகைச்சுவையான ஜனரஞ்சக பொழுதுபோக்கு படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன்.
நடிகர்கள் & குழுவினர் விவரங்கள்
நடிப்பு : அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி,
அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள்,
படவா கோபி
இசையமைப்பாளர்: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு இயக்குனர்: கணேஷ் சந்திரா
தொகுப்பாளர்: ஐ.ஜெரோம் ஆலன்
கலை இயக்குனர்: எஸ்.ஜெயச்சந்திரன்
பிஆர்ஓ: சதீஷ் ஏஐஎம்
தயாரிப்பு: எம்.திருமலை
எழுத்தாளர் – இயக்குனர் : பாலாஜி கேசவன்